News December 3, 2024
என்ன செய்யப் போகிறது PSLV C59 ராக்கெட்?

ப்ரோபா-3 செயற்கைகோளுடன் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை மாலை 4.08 மணிக்கு PSLV C59 ராக்கெட் ஏவப்படுகிறது. பூமியில் இருந்து 60,500 கி.மீ தொலைவில் நிலை நிறுத்தப்படும் இந்த செயற்கைகோள்கள், சூரியனின் புறவெளிக் கதிர்களை ஆய்வு செய்து, உடனுக்குடன் அந்த தரவுகளை அனுப்பும். ராக்கெட்டை ஏவும் இறுதிக்கட்ட பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
Similar News
News August 23, 2025
தவெகவின் 3-வது மாநாடு எங்கே? எப்போது?

தவெக முதல் மாநாடு விழுப்புரத்திலும், 2-வது மாநாடு மதுரையிலும் நடைபெற்ற நிலையில், 3-வது மாநாடு கோவையில் நடைபெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. கொங்கு மண்டலத்தில் அதிமுக, திமுக, பாஜக செல்வாக்காக உள்ளதால் அதனை தகர்க்க விஜய் அங்கு மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தேதிகள் இறுதியாகவில்லை என்றாலும், அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் இந்த மாநாடு நடைபெறலாம் என சொல்லப்படுகிறது.
News August 23, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: குற்றங்கடிதல் ▶குறள் எண்: 436 ▶குறள்: தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின் என்குற்ற மாகும் இறைக்கு. ▶ பொருள்: முதலில் தனக்குள்ள குறையை நீக்கிக் கொண்டு அதன் பின்னர் பிறர் குறையைக் கண்டு சொல்லும் தலைவனுக்கு என்ன குறை நேரும்?
News August 23, 2025
₹64,000 சம்பளம்… 10,270 காலியிடங்கள்

IBPS கிளார்க் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் ஆக.28 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பொதுத்துறை வங்கிகளில் உள்ள 10,270 கஸ்டமர் சர்வீஸ் அசோசியேட் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதில் தமிழகத்துக்கு மட்டும் 894 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. கல்வித்தகுதி: டிகிரி தேர்ச்சி, வயது: 20-28, பிரிலிமினரி & மெயின் தேர்வுகள் அடிப்படையில் ஆள்தேர்வு நடைபெறும். விண்ணப்பிக்க <