News December 3, 2024

பொதுமக்கள் சாலை மறியல்- அதிகாரிகள் உறுதி

image

சேலம் அல்லிகுட்டைப் பகுதியில் குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் சூழ்ந்ததால் அப்பகுதி மக்கள் மன்னார்பாளையம் பிரிவு சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து விரைந்து வந்த மாநகராட்சி ஆணையாளர் ரஞ்ஜீத் சிங், மாமன்ற உறுப்பினர்கள் அவர்களுடன் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர். விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தன் பேரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

Similar News

News November 13, 2025

15ஆம் தேதி முதல் புதிய ரயில் பெட்டிகள் அறிமுகம்!

image

சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து தினந்தோறும், சேலம், சென்னை, எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில்களில் இதுவரை சாதாரண பெட்டிகள் பயன்படுத்தி வந்த நிலையில், வரும் 15ஆம் தேதி முதல் அதிநவீன எல்ஹச்பி எனப்படும் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய அதிர்வை குறைத்து, பாதுகாப்பு வசதியுடன் கூடிய பெட்டிகள் இயக்கப்பட உள்ளதாக, சேலம் ரயில்வே கோட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 13, 2025

வாக்காளர் பட்டியல் திருத்த பணி ஆட்சியர் அறிவுறுத்தல்!

image

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரதிருத்த பணிகள் -2026 கணக்கெடுப்பு படிவத்தினை பெற்ற வாக்காளர்கள் தங்கள் படிவத்தினை தாமதமின்றி பூர்த்தி செய்து வழங்கி சிறப்பு தீவிரத் திருத்த பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு சேலம் மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சியருமான பிருந்தாதேவி அறிவுறுத்திள்ளார். மேலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரதிருத்தம் தொடர்பாக சந்தேகம் இருந்தால் 1950 என்ற எணுக்கு அழைக்கவும்.

News November 13, 2025

இடைநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு!

image

சேலம் மாவட்டத்தில் உள்ள இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதி தேர்வு நவம்பர் மாதம் 15 மற்றும் 16 தேதிகளில் நடைபெற உள்ளதாகவும் சேலம் மாவட்டத்தில் 12 மையங்களில் 4,646 பேர் தேர்வு எழுத உள்ளதாகவும் 104 மாற்றுத்திறனாளிகள் இதில் பங்கேற்பார்கள் என சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

error: Content is protected !!