News December 3, 2024
பொது அறிவு: கேள்விகளுக்கான பதில்கள்

1) புவியின் மையப்பகுதியில் உள்ள வெப்பநிலை – 5000° C 2) வளி மண்டல ஈரப்பத மாற்றங்களைக் கண்டறிய உதவும் கருவி – Hygroscope 3) இந்தியாவின் முதல் பெண் வழக்கறிஞர் – கொர்னேலியா சொராப்ஜி 4) மயன் நாகரிகத்தின் சுவடுகள் மெக்சிகோவில் உள்ளது 5) NSA – National Security Act 6) ‘திருமுருகாற்றுப்படை’ எனும் நூலின் ஆசிரியர் – நக்கீரர் 7) கம்பளிக்காக வளர்க்கப்படும் ஆடு இனம் – மெரினோ.
Similar News
News August 27, 2025
காங்., TVK-க்கும் கள்ள உறவு இருக்கா? எச்.ராஜா

மதுரை, TVK மாநாட்டில் பேசிய விஜய் கச்சத்தீவை இந்தியாவுக்கு பெற்று தரவேண்டும் என தெரிவித்தார். இதுபற்றி பேசிய எச்.ராஜா, விஜய் கொஞ்சமாவது அரசியல் தெரிந்துகொண்டு பேச வேண்டுமென என கூறினார். மேலும், 1974-ல் கச்சத்தீவை தானம் செய்தது காங்., அரசு, கள்ள மவுனம் காத்தது திமுக. இதற்காக காங்கிரஸை ஏன் விஜய் கண்டிக்கவில்லை என கேட்டார். இதன்மூலம் காங்., தவெகவுக்கும் கள்ள உறவு உள்ளதா எனவும் கேள்வி எழுப்பினார்.
News August 27, 2025
பிரபல நடிகர் காலமானார்

பிரபல நடிகரும், அரசியல் தலைவருமான ஜாய் பானர்ஜி(62) காலமானார். மேற்கு வங்கத்தை சேர்ந்த இவர், புகழ்பெற்ற மிலன் திதி, நாக்மதி, சாப்பார் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். பாஜகவில் இணைந்த இவர், 2014 லோக்சபா தேர்தலில் பிர்பும் தொகுதி, 2019 தேர்தலில் உலுபேரியா தொகுதியில் BJP சார்பில் போட்டியிட்டு TMC-யிடம் வெற்றி வாய்ப்பை இழந்தார். ஜாய் பானர்ஜி மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். #RIP
News August 27, 2025
₹500 கோடி இழப்பு.. தவிப்பில் திருப்பூர் நிறுவனங்கள்!

இந்தியாவின் பின்னலாடை ஏற்றுமதியில் 68% திருப்பூரில் இருந்தே நடக்கிறது. இந்நிலையில் டிரம்ப் விதித்த 50% வரியால் பின்னலாடை நிறுவனங்களுக்கு தினசரி ₹500-₹700 கோடி வரை உடனடி இழப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும், ₹4,000 கோடி மதிப்பிலான ஆடைகள் தேங்கி கிடப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அமெரிக்காவுடன் இந்த வரியை நீக்க பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென பின்னலாடை உற்பத்தியாளர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.