News December 3, 2024
உலுக்கிய ஃபெஞ்சல்: 1500 கி.மீ வரை எதிரொலித்த தாக்கம்

வங்காள விரிகுடாவின் தென்மேற்கில் உருவான ஃபெஞ்சல் புயல் கடும் பாதிப்புகளை உண்டாகியுள்ளது. மீட்புப்பணிகள் தொடர்ந்து வரும் நிலையில், இன்று மாலையில் இருந்து புயலின் வீரியம் படிப்படியாக குறையும் என IMD தெரிவித்திருக்கிறது. தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, புதுச்சேரி மாநிலங்கள் மட்டுமின்றி, புயலின் மையத்தில் இருந்து 1500 கி.மீ தொலைவில் இருக்கும் ஒடிஷா மாநிலத்திலும் பாதிப்புகளை உண்டாக்கி இருக்கிறது.
Similar News
News September 10, 2025
நயினாரிடம் எனது மொபைல் எண் உள்ளது: OPS சூசகம்

EPS-ஐ தவிர யாரை CM வேட்பாளராக அறிவித்தாலும் NDA கூட்டணியில் மீண்டும் இணையத் தயார் என்று TTV சிக்னல் கொடுத்துவிட்டார். இந்நிலையில், நயினார் நாகேந்திரனிடம் என்னுடைய மொபைல் எண் உள்ளது, அவர் என்னை அழைத்தால் சந்திக்க தயார் என்று OPS-ம் கூறியுள்ளார். இதனிடையே, டெல்லி சென்று திரும்பிய செங்கோட்டையனோ, அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து அமித்ஷாவிடம் பேசியதாக தெரிவித்துள்ளார். NDA கூட்டணி வலுப்பெறுமா?
News September 10, 2025
உடல் புத்துணர்ச்சியுடன் இருக்க இந்த மூலிகை தேநீர் குடிங்க!

செரிமானத்தை மேம்படுத்தவும், மன அழுத்தத்தைக் குறைக்கவும், உடல் புத்துணர்ச்சி பெறவும் மிளகுக்கீரை தேநீர் உதவும் என சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.
*கொதிக்கும் தண்ணீரில் புதிய 3 மிளகுக்கீரை இலைகளை போட்டு, 5 நிமிடங்கள் வரை கொதிக்க வைக்கவும்.
*நன்கு கொதித்தவுடன், இந்த நீரை வடிகட்டி எடுத்து கொள்ளவும்.
*அதில் தேவைப்பட்டால், தேன் சேர்த்து குடிக்கலாம். SHARE IT.
News September 10, 2025
வரலாறு காணாத குறைவு.. மிகப்பெரிய தாக்கம்

இந்திய பொருட்களுக்கு 50% வரி விதிப்பு, அந்நிய நிதி வெளியேற்றம் போன்ற காரணங்களால், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 3 காசுகள் குறைந்து ₹88.12-ஆக சரிந்துள்ளது. டாலர் மதிப்பு உயர்வதால், இந்தியாவின் இறக்குமதி செலவினம் அதிகரிக்கும். அதுமட்டுமின்றி, சமையல் எண்ணெய்கள், பருப்பு, உரங்கள், எண்ணெய், எரிவாயு ஆகியவற்றுக்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும். இது சாமானிய மக்களை கடுமையாக பாதிக்கும்.