News December 3, 2024

6வது வீரராக களமிறங்குகிறாரா ரோஹித்?

image

ரோஹித் ஷர்மா அணிக்கு திரும்பியுள்ள நிலையில், அணியில் Playing XIல் நிச்சயமாக மாற்றம் இருக்கும். நடைபெறும் 2வது டெஸ்ட் போட்டியில் ரோஹித், 6வது வரிசையில் களமிறங்க வேண்டும் என இந்திய அணி முன்னாள் தேர்வாளர் தேவாங் காந்தி தெரிவித்திருக்கிறார். அணி சரியான கலவையில் இருப்பதால், ஏற்கனவே 6வது வரிசையில் இறங்கிய ரோஹித்திற்கு இது கடினமானதாக இருக்காது என்றும் குறிப்பிட்டுள்ளார். இது சரியானதாக இருக்குமா?

Similar News

News September 10, 2025

வரலாறு காணாத குறைவு.. மிகப்பெரிய தாக்கம்

image

இந்திய பொருட்களுக்கு 50% வரி விதிப்பு, அந்நிய நிதி வெளியேற்றம் போன்ற காரணங்களால், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 3 காசுகள் குறைந்து ₹88.12-ஆக சரிந்துள்ளது. டாலர் மதிப்பு உயர்வதால், இந்தியாவின் இறக்குமதி செலவினம் அதிகரிக்கும். அதுமட்டுமின்றி, சமையல் எண்ணெய்கள், பருப்பு, உரங்கள், எண்ணெய், எரிவாயு ஆகியவற்றுக்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும். இது சாமானிய மக்களை கடுமையாக பாதிக்கும்.

News September 10, 2025

இன்று கனமழை வெளுத்து வாங்கும்

image

தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக கோவை, நீலகிரி, திருவள்ளூர், காஞ்சி, ராணிப்பேட்டை, தி.மலை, கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி, ஈரோடு, தேனி, திண்டுக்கல்லில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக IMD எச்சரித்துள்ளது. அதேபோல், சென்னையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும், மணிக்கு 30-40 கிமீ வேகத்​தில் பலத்த காற்று வீசக்​கூடும் எனவும் அலர்ட் கொடுத்துள்ளது.

News September 10, 2025

Health: இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருக்கா? ஜாக்கிரதை

image

PCOS, PCOD அறிகுறிகள் பற்றி சரியாக தெரியாததால் இதனை சில பெண்கள் கவனிப்பது கிடையாது. அதன் அறிகுறிகளை தெரிந்துக்கொள்ளுங்கள். ➤சீரற்ற மாதவிடாய் சுழற்சி ➤அதிகமாக உடல் எடை கூடுவது/குறைவது ➤கருப்பை கட்டிகள் ➤சரும பிரச்னைகள் ➤சோர்வாகவே இருத்தல் ➤தூக்கமின்மை ➤அதீத ரத்த போக்கு. சில சமயங்களில் PCOS அறிகுறிகள் காட்டாது. எனவே, பெண்கள் 8 மாதங்களுக்கு ஒருமுறை Ultra Sound Scan எடுப்பது நல்லது. SHARE.

error: Content is protected !!