News March 22, 2024

ஆரணி காவல் நிலையத்தில் ஆலோசனை கூட்டம்

image

ஆரணி நகர காவல் நிலையத்தில் டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலைமையில் அனைத்துக் கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. தேர்தலில் அரசியல் கட்சியினர் பிரச்சாரம் மேற்கொள்ளும் இடங்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் பிரச்சார பொதுக்கூட்டங்கள் நடத்தும் இடங்கள் குறித்தும் அவர்களுக்கு காவல்துறை சார்பில் பாதுகாப்பு அளிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி, எஸ்ஐ சுந்தரேசன் உடனிருந்தனர்.

Similar News

News October 26, 2025

தி.மலை: இனி அலைச்சல் வேண்டாம், ஒரு மெசேஜ் போதும்!

image

தி.மலை மக்களே கேஸ் சிலிண்டரை புக்கிங் செய்ய போனில் இருந்து ஒரு SMS அனுப்பினாலே போதும். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். இதுவே பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கு மெசேஜ் அனுப்பி அலைச்சல் இல்லாமல் கேஸ் சிலிண்டரை ஈசியாக புக்கிங் செய்யலாம். ஷேர்

News October 26, 2025

தி.மலை: இளைஞர்களுக்கு ரூ.10 லட்சம் கடன்!

image

பிரதம மந்திரி ரோஸ்கர் யோஜனா (PMRY) திட்டம், 1993-இல் தொடங்கப்பட்டது. படித்த வேலையற்ற இளைஞர்கள் சுயதொழில் தொடங்க ரூ.10 லட்சம் வரை மானியக் கடன் வழங்குகிறது. உற்பத்தி, சேவை, வர்த்தகத் துறைகளில் கடன் வழங்கப்படும். 18-35 வயது வரையிலான, 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.15% வரை மானியமும், தொழில் மேம்பாட்டுப் பயிற்சியும் அளிக்கப்படும். மாவட்ட தொழில் மையங்கள் <>மூலம் விண்ணப்பிக்கலாம்<<>>.

News October 26, 2025

இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (அக்.25) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!