News December 3, 2024

 பெஞ்சல் புயலால் 46.98 ஹெக்டேர் நெற்பயிர் சேதம்

image

வேலூர் மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயலால் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்தது. தொடர் மழையால் காட்பாடி, பொன்னை, குடியாத்தம், அணைக்கட்டு உள்ளிட்ட சில பகுதிகளில் 79 விவசாயிகள் பயிரிட்டு அறுவடைக்கு தயாராக இருந்த 4698 ஹெக்டேர் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளதாக வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். நெற்பயிர்கள் சேதத்தால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். 

Similar News

News August 11, 2025

திருவள்ளுவர் பல்கலையில் பட்டமளிப்பு விழா – ஆளுநர் பங்கேற்பு

image

காட்பாடி அடுத்த சேர்க்காடு பகுதியில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் 20ம் ஆண்டு பட்டமளிப்பு விழா வரும் ஆக.19-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு ஆளுநரும், திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் வேந்தருமான ஆர்.என்.ரவி, உயர்கல்வி துறை அமைச்சர் கோவி.செழியன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குகிறார்கள் என பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 11, 2025

வேலூரில் மனித கழிவுகளை அகற்ற இனி ரோபோக்கள்

image

வேலூர் மாநகராட்சியில், மனித கழிவுகளை அகற்றும் பணியில் இனி தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் உயிர் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, இந்த வேலையைச் செய்ய ரோபோட்டிக் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இந்த இயந்திரங்கள் பணியாளர்களின் சுகாதாரத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்யும். விரைவில் இவை பயன்பாட்டுக்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News August 11, 2025

வேலூர் மாவட்டத்தில் தோட்டக்கலை பயிர்களுக்கு பயிர்க் காப்பீடு

image

வேலூர் மாவட்டத்தில் வாழை, கத்திரி, மஞ்சள், தக்காளி போன்ற தோட்டக்கலைப் பயிர்களுக்கு பயிர்க் காப்பீடு செய்ய தோட்டக்கலைத் துறை அறிவித்துள்ளது. இயற்கை சீற்றங்கள், பூச்சி மற்றும் நோய் தாக்குதல்களால் ஏற்படும் பயிர் இழப்புகளுக்கு இந்த காப்பீடு பாதுகாப்பளிக்கும் என தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் மணிகண்டன் தெரிவித்துள்ளார். விவசாயிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

error: Content is protected !!