News December 3, 2024

டிச.22இல் பி.வி.சிந்துவுக்கு டும் டும் டும்!

image

இருமுறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற இந்தியாவின் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு (29) வரும் டிச. 22ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. ஹைதராபாத்தைச் சேர்ந்த வெங்கட தத்தா சாய் என்பவரை அவர் திருமணம் செய்ய உள்ளார். சாய், போசிடெக்ஸ் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக உள்ளார். திருமணம் உதய்பூரில் நடைபெறும் என உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

Similar News

News April 28, 2025

மெஹுல் சோக்சி, நீரவ் மோடி ஆவணங்கள் தீக்கிரை?

image

டெல்லி: ED தலைமை அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் முக்கிய வழக்கு ஆவணங்கள் எரிந்து சாம்பலாகியுள்ளன. அதில், மெஹுல் சோக்சி, நீரவ் மோடி உள்ளிட்டோர் வழக்கின் விசாரணை பதிவுகள் அழிந்து போயிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால், வழக்கின் உண்மையான ஆவணங்கள் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுவிட்டதாகவும் நகல் மட்டுமே அங்கு இருந்ததாகவும் கூறப்படுகிறது. அண்மையில்தான் சோக்சி பெல்ஜியத்தில் கைது கைதானார்.

News April 28, 2025

கோர விபத்து.. PM மோடி இரங்கல்

image

ம.பி. சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு PM மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மாந்த்சௌர் பகுதியில் பைக் மீது மோதி வேன் கிணற்றில் விழுந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த மோடி, தலா ₹2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும், காயமடைந்தவர்களுக்கு ₹50,000 வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

News April 28, 2025

PM மோடி சொன்ன ஆப்… உங்ககிட்ட இருக்கா..?

image

‘மன் கீ பாத்’ நிகழ்ச்சியில் PM மோடி குறிப்பிட்ட SACHET செயலியின் சிறப்பு அம்சங்கள் என்னென்ன தெரியுமா? இந்திய வானிலை ஆய்வு துறையின் அதிகாரப்பூர்வ ஆப்பான இதில், தங்கள் பகுதியின் real-time வானிலையை மக்கள் அறிந்து கொள்ளலாம். மேலும், பேரழிவு காலங்களில் இந்த செயலியின் மூலம் உதவி எண்கள், அதிகம் பாதிக்கப்பட்ட இடங்கள் போன்ற தகவல்களையும் அறியலாம். இது 12 மொழிகளிலும் சேவை வழங்குகிறது. உங்ககிட்ட இருக்கா?

error: Content is protected !!