News December 3, 2024

JOB ALERT: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

image

வடகிழக்கு எல்லை ரயில்வேயில் காலியாக உள்ள 5,647 பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு இன்றுடன் (டிச.3) நிறைவடைகிறது. Trade Apprentice பணியில் சேர விருப்பமும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு: 15-24. கல்வித்தகுதி: 10ஆம் வகுப்பு, ITI (50% மதிப்பெண்கள்). பயிற்சியின் போது ரயில்வே விதிமுறைப்படி உதவித் தொகை வழங்கப்படும். கூடுதல் தகவலுக்கு <>இந்த<<>> லிங்க்கை கிளிக் செய்யுங்கள்.

Similar News

News April 28, 2025

கோர விபத்து.. PM மோடி இரங்கல்

image

ம.பி. சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு PM மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மாந்த்சௌர் பகுதியில் பைக் மீது மோதி வேன் கிணற்றில் விழுந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த மோடி, தலா ₹2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும், காயமடைந்தவர்களுக்கு ₹50,000 வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

News April 28, 2025

PM மோடி சொன்ன ஆப்… உங்ககிட்ட இருக்கா..?

image

‘மன் கீ பாத்’ நிகழ்ச்சியில் PM மோடி குறிப்பிட்ட SACHET செயலியின் சிறப்பு அம்சங்கள் என்னென்ன தெரியுமா? இந்திய வானிலை ஆய்வு துறையின் அதிகாரப்பூர்வ ஆப்பான இதில், தங்கள் பகுதியின் real-time வானிலையை மக்கள் அறிந்து கொள்ளலாம். மேலும், பேரழிவு காலங்களில் இந்த செயலியின் மூலம் உதவி எண்கள், அதிகம் பாதிக்கப்பட்ட இடங்கள் போன்ற தகவல்களையும் அறியலாம். இது 12 மொழிகளிலும் சேவை வழங்குகிறது. உங்ககிட்ட இருக்கா?

News April 28, 2025

திமுக ஆட்சி குறித்து பேச அதிமுகவிற்கு தகுதியில்லை: CM

image

தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு சரியில்லை என பேசிய இபிஎஸ்-க்கு CM ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். துயரமான ஆட்சிக்கு தூத்துக்குடி சாட்சி, அவமான ஆட்சிக்கு அதிமுக ஆட்சியே சாட்சி என்று விமர்சித்த அவர், சட்டம் ஒழுங்கு குறித்து பேசவும், திமுக ஆட்சி மீது குற்றம் சாட்டவும் அதிமுகவிற்கு எந்த தகுதியும் கிடையாது; ஊழல் வழக்குகளில் இருந்து தப்பிக்க தமிழ்நாட்டின் உரிமைகளை அதிமுக அடகு வைத்தாக விமர்சித்தார்.

error: Content is protected !!