News March 22, 2024
தஞ்சை பாஜக வேட்பாளர் அறிவிப்பு

தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின், பாஜக வேட்பாளராக எம்.முருகானந்தம் அறிவிக்கப்பட்டுள்ளார். மக்களவைத் தேர்தல் 2024 தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதம் 19ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக பாஜக நேற்று 9 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவித்த நிலையில், தற்போது 2ம் கட்டமாக 15 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
Similar News
News August 15, 2025
தஞ்சாவூர் : இரவு ரோந்து போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட். 15) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News August 15, 2025
தஞ்சை: கிராமப்புற வளர்ச்சி வங்கி வேலை! ரூ .45000 சம்பளம்

தஞ்சை: Engineering படித்தவர்களுக்கு தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியின் (NABARD) தமிழ்நாட்டில் Supervisors உள்ளிட்ட 63 பணியிடங்கள் நிரப்படவவுள்ளது. மாத சம்பளமாக Rs.45,000 வழங்கப்படும். கல்வி தகுதி B.E / B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 35 வயதிற்கு மேற்படாதவராக இருக்க வேண்டும். இங்கே <
News August 15, 2025
தேசிய கொடியை ஏற்றிய தஞ்சை ஆட்சியர்

79வது சுதந்திர தினவிழாவில் தஞ்சை மாவட்டஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தேசியகொடியினை ஏற்றி வைத்து, மூவர்ண பலூன்களையும், சமாதான புறாக்களையும் பறக்க விட்டார். தொடர்ந்து திறந்த ஜீப்பில் நின்றவாறு காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். மேலும் இந்நிகழ்வில் பல்வேறு துறைகளின் சார்பில் 32 பயனாளிகளுக்கு இரண்டு கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.