News March 22, 2024
குமரி அருகே செல்போன் கடைக்காரருக்கு கத்திக்குத்து

குமரி, வடசேரியை சேர்ந்தவர் கார்த்திக்(28). இவர் ஒழுகினசேரியில் செல்போன் கடை நடத்தி வருகிறார். நேற்று இவரது கடைக்கு பெரியவிளையை சேர்ந்த சுகுமாரன்(29) என்பவர் செல்போனுக்கு ரீசார்ஜ் செய்ய வந்தார். அப்போது அவர்கள் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் சுகுமாரன் கத்தியை எடுத்து கார்த்திக்கை குத்தியதில் அவர் படுகாயமடைந்தார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News August 15, 2025
குமரியில் விநாயகர் சிலைகளை 10 இடங்களில் கரைக்கலாம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் வைக்கப்படும் விநாயகர் சிலைகள் கன்னியாகுமரி, சொத்த விளை, சின்ன விளை, சங்குத்துறை, வெட்டுமடை, தேங்காய்ப்பட்டணம், மிடாலம் கடற்கரைகளில் கரைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதே போல் பள்ளிக்கோணம், அணைக்கட்டு, திற்பரப்பு அருவி, தாமிரபரணி ஆறு போன்ற இடங்களில் விநாயகர் சிலைகளை கரைக்க அரசு அனுமதித்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
News August 15, 2025
குமரி இளைஞர்களே, அரசு இலவச பயிற்சி.. வேலை ரெடி!

குமரி இளைஞர்களே, தமிழக அரசு வெற்றி நிச்சயம் திட்டம் மூலம் 8-வது முதல் டிகிரி வரை எந்த படிப்பு முடித்திருந்தாலும் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பை உறுதி செய்து வருகிறது. TN Skill என்ற இணையதளத்திற்கு சென்று ஆட்டோமொபைல், எலக்ட்ரிக்கல் முதல் ஐடி துறை வரை பல்வேறு பயிற்சிகளை தேர்வு செய்து கொள்ளலாம். பெரும்பாலான பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. வேலைவாய்ப்பை உறுதி செய்யும் இத்தகவலை SHARE பண்ணுங்க.
News August 15, 2025
பாலமோரில் 22.4 மில்லி மீட்டர் மழை பதிவு

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பாலமோரில் 22.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. குழித்துறையில் 21.2 மி.மீ, பேச்சிப்பாறை 19.8 மி.மீ, ஆனைக்கிடங்கு 17.2 மி.மீ, சுருளோடு 16.4 மி.மீ, திற்பரப்பு 14.8 மி.மீ, சிற்றாறு ஒன்று 14.4 மி.மீ, சிவலோகம் 14.2 மி.மீ, பெருஞ்சாணி 13.8 மி.மீ, புத்தன் அணை 11.2 மி.மீ, களியலில் 10.2 மி.மீ.மழை பதிவாகியுள்ளது.