News December 2, 2024
குமரி மக்கள் குறைதீர் கூட்டம் நிறைவு

குமரி ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில், பொது மக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவித்தொகை, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 383 கோரிக்கை மனுக்கள் இன்று பெறப்பட்டதாக ஆட்சியர் அழகுமீனா தகவல் தெரிவித்துள்ளார். மேலும், மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News August 6, 2025
உங்களுடன் ஸ்டாலின் முகாமில் 478 மனுக்கள்

சுருளகோடு புனித அந்தோணியார் உயர்நிலை பள்ளி வளாகத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது. இந்த முகாமில் பொதுமக்கள் தரப்பில் மொத்தம் 478 மனுக்கள் பல்வேறு துறைகளுக்கு கொடுக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை வட்டார வளர்ச்சி அலுவலர் சசி, வட்டடாட்சியர் சுந்தரவல்லி, முன்னாள் ஊராட்சி தலைவர் விமலாசுரேஷ் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
News August 5, 2025
பிளாஸ்டிக் பொருட்கள் வைக்கப்பட்டிருந்த குடோனுக்கு சீல்

குழித்துறை நகராட்சி சுகாதார ஆய்வாளர் ராஜேஷ் தலைமையில் சுகாதார பணியாளர்களுக்கு மார்த்தாண்டம் பகுதியில் ஒரு குடோனில் பிளாஸ்டிக் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக கிடைத்த தகவலின் பெயரில் அங்கு இன்று திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் குடோனில் ஏராளமான பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அந்த குடோனுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
News August 5, 2025
குமரி: டிகிரி முடித்தால் மத்திய அரசு வேலை

மத்திய அரசின் கீழ் இயங்கும் நிதி நிறுவனத்தில் ( OICL ) 500 அசிஸ்டண்ட் காலியிடங்கள் உள்ளன. இப்பணிக்கு சம்பளமாக ரூ.22,405 முதல் 62,265 வரை வழங்கபடுகிறது. டிகிரி முடித்தவர்கள் 02.08.2025 முதல் 17.08.2025 க்குள் <