News March 22, 2024
ஜனநாயகத்தின் மீது கொடூர தாக்குதல்

மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்கத்துறையால் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். இதற்கு நாடு முழுவதும் எதிர்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். சென்னையில் கெஜ்ரிவால் கைதை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த படங்களை எக்ஸ் தளத்தில் பகிர்ந்த முதல்வர் ஸ்டாலின், டெல்லியில் ஜனநாயகத்தின் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கண்டனம் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 19, 2025
இளைஞரை நிர்வாணப்படுத்தி வண்டியில் கட்டி சித்ரவதை

உ.பி.யில் இளைஞரை நிர்வாணப்படுத்தி மாட்டு வண்டியில் கட்டி இழுத்து சென்று கிராம மக்கள் சித்ரவதை செய்துள்ளனர். விஷேஷ்வர்கஞ்சில் 22 வயது இளைஞர் மீது பாலியல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவரை பிடித்து சென்ற மக்கள், ஆடையை களைந்து நிர்வாணப்படுத்தி வண்டியில் கட்டி இழுத்து சென்றனர். அப்போது அவரை சிலர் கடுமையாகத் தாக்கினர். அவரின் சகோதரி அளித்த புகாரின்பேரில் போலீஸ் விசாரிக்கிறது.
News April 19, 2025
200 சிக்சர்கள்.. கே.எல். ராகுல் சாதனை

IPLஇல் டெல்லி கேபிடல்ஸ் வீரர் கே.எல். ராகுல் 200 சிக்சர்களை விளாசி சாதனை படைத்துள்ளார். குஜராத் டைடன்ஸ்க்கு எதிராக இன்று நடந்த போட்டியில் அவர் சிக்சர் விளாசினார். இதன்மூலம் 200 சிக்சர் அடித்த வீரர்கள் பட்டியலில், அவர் இடம்பிடித்தார். அதாவது, 200 சிக்சர்கள் விளாசிய 6ஆவது இந்தியர், 11ஆவது சர்வதேச வீரர் என்ற பெருமையை பெற்றார். எனினும், 14 பந்துகளில் 28 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
News April 19, 2025
தோனி, படுகோனேவுக்கு நாமம் போட்ட BluSmart?

EV வாடகை கார் சேவை நிறுவனமான <<16128336>>BluSmart<<>> தனது செயல்பாடுகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. இதன் இணை நிறுவனர் அன்மோல் ஜக்கி, முதலீட்டாளர்கள் நிதியை மோசடி செய்ததாக SEBI குற்றஞ்சாட்டிய நிலையில், BluSmart-ன் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. இந்நிறுவனத்தில் கடந்த 2019-ல் தீபிகா படுகோனே $30 லட்சம் முதலீடு செய்தார். அதேபோல், தோனியின் குடும்ப நிறுவனம் உள்பட 3 நிறுவனங்கள் $2.4 கோடி முதலீடு செய்தன.