News December 2, 2024
கூடலூர் அருகே தோட்டத்தில் புகுந்த காட்டுயானைகள்

தேனி: கூடலூர் மலையடிவாரம் ஒட்டிய பகுதியில் சொட்டுநீர் பாசன மூலம் தட்டைப் பயறு, முட்டைக்கோஸ் மற்றும் தென்னை மரக்கன்றுகள் வளர்த்து வருகின்றனர். இன்று காலை குட்டியுடன் 6 காட்டுயானைகள் தோட்டத்துக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி உள்ளன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே விளைநிலங்களுக்குள் யானைகள் வருவதை தடுக்க மாவட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
Similar News
News November 11, 2025
தேனி: விஷ பூச்சியால் பறிபோன இளைஞர் உயிர்

உப்புக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் பாண்டியராஜ் (32). இவர் நேற்று முன்தினம் அவரது தோட்டத்தில் இருந்த பொழுது விஷப்பூச்சி ஒன்று அவரை கடித்துள்ளது. அவரை மீட்ட உறவினர்கள் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்நிலையில் நேற்று (நவ.10) அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்கு பதிவு.
News November 11, 2025
தேனி: மாடுகளுடன் தகாத உறவு.. ஒருவர் கைது

வருஷநாடு, சிங்கராஜபுரத்தை சேர்ந்தவர் கர்ணன். நேற்று முன்தினம் இவரது மாட்டு கொட்டத்தில் இருந்த கேமராக்கள் திருடு போனது. கேமரா வீடியோ பதிவுகளை ஆய்வு செய்ததில் அப்பகுதியை சேர்ந்த ஜெகன்பாண்டி (22) மாடுகளுடன் தகாத உறவு வைத்துக்கொள்ள முயற்சி செய்து மாடுகளை துன்புறுத்தியதும் அதனை தொடர்ந்து கேமராவை திருடியதும் வீடியோவில் பதிவாகி இருந்தது. புகாரில் வருஷநாடு போலீசார் ஜெகன்பாண்டியை கைது (நவ. 10) செய்தனர்
News November 11, 2025
தேனி: இலவச அடுப்பு + கேஸ் வேணுமா – APPLY NOW!

தேனி மக்களே, Ujjwala 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், முதல் சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் (Bharatgas,Indane,Hp) உங்க வீடு அருகாமையில் உள்ள கேஸ் நிறுவனங்கள் எதற்குனாலும் <


