News March 22, 2024
ரிலீஸ் ஆகாமலேயே ரூ.420 கோடி குவித்த திரைப்படம்

ரிலீஸூக்கு முன்பே ராம் சரணின் கேம் சேஞ்சர் படம் ரூ.420 கோடி ஈட்டியுள்ளது. ரூ.400 கோடி பட்ஜெட்டில் படத்தை சங்கர் இயக்கியுள்ளார். ஒரு சண்டை காட்சியை படமாக்க மட்டுமே ரூ.70 கோடி செலவிடப்பட்டுள்ளது. டிரைலரோ, ரிலீஸ் தேதியோ இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும் தமிழ் பதிப்பை பிரைம் ஓடிடி ரூ.150 கோடிக்கும், தெலுங்கு பதிப்பை ஜீ5 ரூ.270 கோடிக்கும் வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
Similar News
News October 23, 2025
மத்திய அரசில் 2,623 பணியிடங்கள்!

ONGC-ல் காலியாக உள்ள 2,623 Apprentice பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 18- 24 வயதுக்குட்பட்ட 10-வது, 12-வது, ITI, டிகிரி முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். Merit List & Certificate Verification மூலம் தேர்ச்சி நடைபெறும். ₹8,200- ₹12,300 வரை மாதச்சம்பளம் வழங்கப்படும். முழு விவரங்களுக்கு <
News October 23, 2025
ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தும் இந்தியா

அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகள் புதிதாக தடைகளை விதித்ததை தொடர்ந்து, இந்திய நிறுவனங்கள் ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்குவதை குறைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, ரிலையன்ஸ் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் இத்தகைய முடிவை எடுத்துள்ளன. இந்திய நிறுவனங்களின் முடிவால், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்யின் விலை 3% அதிகரித்துள்ளது. இது மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
News October 23, 2025
பிரதிகா ராவல் அசத்தல் சதம்

மகளிர் WC போட்டியில் நியூசி.,க்கு எதிரான ஆட்டத்தில் ஓபனிங் இறங்கிய பிரதிகா ராவல் சதம் அடித்துள்ளார். ஸ்மிருதி மந்தனாவுடன் இணைந்து 200 ரன்கள் பார்ட்னர்ஷிப் எடுத்து புதிய சாதனை படைத்த பிரதிகா 122 பந்துகளில் சதம் அடித்து களத்தில் நிற்கிறார். முன்னதாக ஸ்மிருதி மந்தனா 109 ரன்களில் ஆட்டமிழந்தார். தற்போது இந்திய அணி 38.1 ஓவர்களில் 239/1 ரன்களுடன் ஆடிவருகிறது.