News December 2, 2024
’கங்குவா’ படக்குழு மீண்டும் ஷாக்!

’கங்குவா’ திரைப்படத்தின் HD Print இணையத்தில் லீக் ஆனதால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் மோசமான விமர்சனங்களைப் பெற்ற நிலையில், 4 வாரங்களிலேயே ஓடிடியில் வெளியிட முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் 13ஆம் தேதி இப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், HD Print இணையத்தில் கசிந்துள்ளது படக்குழுவை அதிர்ச்சியடையச் செய்துள்ளது..
Similar News
News August 25, 2025
10 மாசமா EMI கட்டவில்லை.. ரவி மோகன் பங்களா ஜப்தி?

சென்னை ECR-ல் உள்ள நடிகர் ரவி மோகனின் சொகுசு பங்களாவை ஜப்தி செய்ய நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பங்களாவுக்காக பெற்ற கடன் தொகையின் EMI-யை 10 மாதங்களாக அவர் கட்டாததன் காரணமாக, இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. கொரியர் பாய் கொண்டு சென்ற நோட்டீஸை வாங்காமல், வங்கியில் வந்து நோட்டீஸ் பெற்றுக் கொள்வதாக கூறி ரவி மோகன் தரப்பு மறுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
News August 25, 2025
ரேஷன் கார்டு.. தமிழக அரசு குட் நியூஸ்!

ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே விண்ணப்பிக்கலாம். எப்படி தெரியுமா? www.tnpds.gov.in இணையதளத்தில் ‘புதிய மின்னணு அட்டை விண்ணப்பிக்க’ என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதில், கேட்கப்படும் விவரங்களை நிரப்பிவிட்டு, தேவையான ஆவணங்களை அப்லோடு செய்ய வேண்டும். 30 – 45 நாள்களில் விண்ணப்பத்தின் நிலை குறித்து அரசு தகவல் தெரிவிக்கும். SHARE IT.
News August 25, 2025
ஏற்றத்தில் முடிந்த சந்தைகள்.. லாபம் கண்ட பங்குகள்?

இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்தில் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளன. சென்செக்ஸ் 329 புள்ளிகள் உயர்ந்து 81,635 புள்ளிகளாகவும், நிஃப்டி 97 புள்ளிகள் உயர்ந்து 24,967 புள்ளிகளிலும் வர்த்தகமாகின. Infosys, TCS, HCL Tech, Wipro, Hindalco உள்ளிட்ட ஐடி நிறுவனங்களில் பங்குகளில் முதலீடு செய்தவர்கள் நல்ல லாபம் பார்த்துள்ளனர். நீங்கள் வாங்கிய SHARE லாபம் தந்ததா?