News December 2, 2024
ஹெச்.ராஜாவுக்கு 6 மாதங்கள் சிறை

பெரியார் சிலையை உடைப்பேன் என்று பேசிய விவகாரத்திலும், திமுக எம்.பி. கனிமொழி குறித்து அவதூறு பேசிய விவகாரத்திலும் ஹெச்.ராஜாவுக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை வழங்கியிருக்கிறது சிறப்பு நீதிமன்றம். 2018ஆம் ஆண்டு நடைபெற்ற இச்சம்பவம் குறித்து தமிழகம் முழுவதும் திமுகவினர் போலீசிடம் மனு அளித்திருந்தனர். <<14767601>>இது தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு க்ளிக்.<<>>
Similar News
News August 22, 2025
விமர்சனங்கள் குறித்து விஜய் சேதுபதி பதில்

விஜய் சேதுபதி தற்போது மிஷ்கின் இயக்கத்தில் ‘டிரெய்ன்’ படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் தன் மீதும், தனது மகன் சூர்யா மீதும் எழும் விமர்சனங்கள் குறித்து பேசியுள்ளார். அதில், எல்லா இடங்களிலும் எதிர்மறையான விஷயங்கள் உள்ளது என்றும், அதை தடுக்க முடியாது, ஆனால் எப்படி கையாளுவது? என்பதை கற்றுக்கொள்வதே முக்கியம் என தெரிவித்துள்ளார்.
News August 22, 2025
ஆறுமுகனாக காட்சி தரும் விநாயகர்!

தம்பி ஆறுமுகம் போலவே, அண்ணன் விநாயகரும், திண்டுக்கல் மாவட்டம் பழநியில் ஆறு முகங்களுடன் சண்முகா நதிக்கரையில் காட்சி தருகிறார். சூரனை வீழ்த்திவிட்டு, உக்கிரத்துடன் இருந்த முருகனின் கோபத்தை தணிக்க, ஆறுமுகத்துடன் காட்சி தந்து சிரிக்க வைத்தாராம் விநாயகர். இதனால், விநாயகர் ஆறுமுகத்துடன் காட்சி தருகிறார். இங்கு வந்து விநாயகரை வழிபட்டால், சகல பாவங்களும் நீங்கும் என நம்பப்படுகிறது. SHARE IT.
News August 22, 2025
விஜய் உடன் கூட்டணி சேரும் முக்கிய கட்சி?

விஜய் இதுவரை விமர்சிக்காத அதிமுகவை கூட மதுரை மாநாட்டில் விமர்சித்தார். ஆனால், <<17474959>>விஜயகாந்தை பாராட்டி<<>> பேசியதில் அரசியல் கணக்கு இருப்பதாக பார்க்கப்படுகிறது. ‘விஜய் எங்க வீட்டு பையன், எங்களுக்கு தம்பிதான்’ என பிரேமலதாவும் தெரிவித்துள்ளார். இதனால், தவெக – தேமுதிக கூட்டணி உருவாகும் என பேச்சு அடிபடுகிறது. ஜன. 9 தேமுதிக மாநாட்டில் இதுகுறித்து அறிவிப்பு வெளியாகலாம். இந்த கூட்டணி பற்றி உங்க கருத்தென்ன?