News December 2, 2024
H.ராஜா குற்றவாளி என தீர்ப்பு

பெரியார் சிலையை உடைப்பேன் என்று பேசிய பாஜகவின் H.ராஜா குற்றவாளி என்று சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2018ஆம் ஆண்டு பெரியார் சிலையை உடைப்பேன் என்று ஹெச்.ராஜா X தளத்தில் பதிவு செய்திருந்தார். இதற்கு எதிராக திமுகவினர் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும், திமுக எம்.பி கனிமொழி குறித்த X பதிவு விவகாரத்திலும் அவர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 22, 2025
கூட்டணி இல்லை.. அதிமுக அதிகாரப்பூர்வ முடிவு

விஜய் உடன் கூட்டணி என்ற முடிவை அதிமுக கைவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மதுரை தவெக மாநாட்டில் அதிமுகவை விஜய் கடுமையாக விமர்சித்தார். அதன் பின்னர், சினிமா வசனம் மட்டும் பேசி CM ஆக முடியாது என EPS, விஜய்க்கு பதிலடி கொடுத்தார். இந்த விவகாரம் தொடர்பாக ADMK மூத்த தலைவர் ஒருவரிடம் பேசியபோது கழகத்தை விமர்சிக்கும் யாருடனும் கூட்டணி இல்லை என்பதில் EPS உறுதியாக உள்ளார் என திட்டவட்டமாக கூறினார். உங்கள் கருத்து?
News August 22, 2025
அன்பை கொடுத்து யாரும் ஏமாறுவதில்லை..

நான் மற்றவர்களுக்கு நல்லதே நினைத்தாலும், எனக்கு நல்லது நடக்க மாட்டேங்குது. பல இடங்களில் ஏமாளியாக நிற்கிறேன், ஈசியாக ஏமாற்றப்படுகிறேன் என புலம்புபவரா? ஒன்றே ஒன்றை மனதில் கொள்ளுங்கள். மற்றவர்களுக்கு அன்பை கொடுத்து ஏமாற்றபட்டால், கொஞ்சமும் மனம் சஞ்சலம் அடைய தேவையில்லை. ஏமாற்றப்படுவது நீங்கள் அல்ல.. அவர்கள்தான். இந்த உலகிற்கு என்ன கொடுக்கிறீர்களோ, அதுவே திரும்ப வரும். அன்பை மட்டுமே பகிர்வோம்.
News August 22, 2025
சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்தி?

ரஜினி – கமலை வைத்து லோகேஷ் இயக்கவுள்ளதால் ‘கைதி 2’ படப் பணிகள் தள்ளிப்போவதாக தகவல் வெளியானது. ஆனால் இப்படத்திற்காக ஏற்கெனவே கார்த்தி கால்ஷீட் கொடுத்துள்ளதால், தற்போது அதைக் கொண்டு சுந்தர்.சி இயக்கும் படத்தில் அவர் நடிக்கவுள்ளாராம். இதன் ஷூட்டிங் டிசம்பரில் தொடங்கும் என கூறப்படுகிறது. இதற்குள் ‘மூக்குத்தி அம்மன் 2’ பட வேலைகளை சுந்தர் முடிக்கவுள்ளார். இந்த காம்போ எப்படி இருக்கும்?