News December 2, 2024
வட மாவட்டங்களை புரட்டிப் போடும் கனமழை

ஃபெஞ்சல் புயலால் நவம்பர் 30ஆம் தேதி விழுப்புரம், புதுச்சேரி கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் மிகுந்த பாதிப்பை கண்டிருக்கின்றன. கடந்த 24 மணி நேரத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் 24 செ.மீ. மழையும் திருவண்ணாமலையில் 22 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. மேலும், அங்கு மழை தொடர்ந்து கொண்டிருப்பதால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.
Similar News
News April 28, 2025
பயத்தில் நாட்டை விட்டு ஓடும் பாக். தளபதிகள்!

பஹல்காம் தாக்குதல் பாகிஸ்தானை கதிகலங்க செய்துள்ளது. இந்தியாவின் பதிலடி குறித்த அச்சத்தில் அந்நாட்டு முக்கிய ராணுவ தளபதிகள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வெளிநாடுகளுக்குச் சென்று வருகின்றனர். தலைமை தளபதி ஆசிம் முனிர் எங்கே இருக்கிறார் என்றே தெரியாத நிலையில், தளபதிகளின் ராஜினாமா குறித்த லெப்டினண்ட் ஜெனரல் உமர் அகமத்தின் கடிதம் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக பாக். அரசு எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
News April 28, 2025
பொன்முடி அவுட்…விழுப்புரம் திமுக பரபர

சர்ச்சை பேச்சுக்காக கட்சிப் பதவியை இழந்த பொன்முடி, தற்போது அமைச்சரவையில் இருந்தும் விலகியிருப்பது, அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தடுத்து அவர் பதவிகளை இழந்திருப்பது, விழுப்புரம் மாவட்ட திமுகவில் அவருடைய எதிர்த்தரப்பான செஞ்சி மஸ்தான், லட்சுமணன் கோஷ்டியினரின் கையை ஓங்கச் செய்துள்ளது. மாவட்டம் 3-ஆக பிரிக்கப்பட்டதில் இருந்தே பொன்முடி அதிருப்தியில் இருந்துவந்தது குறிப்பிடத்தக்கது.
News April 28, 2025
சம்மரில் சர்க்கரை நோயாளிகள் இதை குடிக்கலாம்!

சம்மரில் வெப்பத்தை குறைக்கவும், ரத்த குளுக்கோஸ் அளவை கட்டுக்குள் வைக்கவும் சர்க்கரை நோயாளிகள் கீழ்காணும் பானங்களை பருகலாம். மசாலா மோர் செரிமானத்தை ஊக்குவிக்கவும், உடலை நீரேற்றமாக வைத்திருக்கவும் உதவுகிறது. பொட்டாசியம், எலக்ட்ரோலைட்களின் சிறந்த மூலமான தேங்காய் நீரை பருகலாம். நெல்லிக்காய் சாரில் வைட்டமின் சி, ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளது. வெள்ளரிக்காய் – புதினா டிடாக்ஸ் நீரையும் பருகலாம்.