News December 1, 2024
இனி ATM-இல் பி.எஃப் பணத்தை எடுக்கலாம்.. செம்ம

பான் கார்டுகளை டிஜிட்டல்மயமாக்கும் PAN 2.0 திட்டத்தை அறிமுகப்படுத்திய நிலையில், தற்போது இபிஎஃப்ஓ 3.0 திட்டத்தை மத்திய அரசு கொண்டு வரவுள்ளது. இதன் மூலம் ஊழியர்கள், தங்கள் பிஃஎப் பங்களிப்பை உயர்த்திக் கொள்ளலாம். மேலும், 2025-ம் ஆண்டிலிருந்து நேரடியாக ஏடிஎம்-இலிருந்தே பிஃஎப். பணத்தை பெற்றுக் கொள்ளும் நடைமுறையும் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Similar News
News August 25, 2025
வரலாற்றில் இன்று

1952 – நடிகரும் தேமுதிக நிறுவனருமான விஜயகாந்த் பிறந்தநாள்
1994 – மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் பிறந்தநாள்
1998 – தனுஷ்கோடி அருகே அகதிகளின் படகு கவிழ்ந்ததில் 45 பேர் பலி
2012 – நிலவில் முதன்முதலாக கால் பதித்த நீல் ஆம்ஸ்ட்ராங் நினைவு நாள்
News August 25, 2025
நான் SK-வின் certified ஃபேன் கேர்ள்: ருக்மினி

மதராஸி படம் தன் மனதுக்கு நெருக்கமான படம் என்று நடிகை ருக்மினி வசந்த் தெரிவித்துள்ளார். தனக்கு தொடக்க காலத்திலேயே, அன்பை அள்ளிக்கொடுக்கும் தமிழ் ரசிகர்களுக்கு நன்றி எனவும், மதராஸி இசை வெளியீட்டு விழாவில் கூறியுள்ளார். தனக்கு வாய்ப்பளித்த இயக்குநர் முருகதாஸுக்கு நன்றி சொல்லிய அவர், தான் SK-வின் certified ஃபேன் கேர்ள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
News August 25, 2025
மலாலா யூசஃப்சாய் பொன்மொழிகள்

▶ ஒட்டுமொத்த உலகமும் மவுனம் காக்கும் போது, ஒரே ஒரு குரல்கூட சக்திவாய்ந்ததாக மாறும். ▶ ஒரு குழந்தை, ஒரு பேனா, ஒரு புத்தகம் ஆகியவை உலகையே மாற்றும். ▶ நாம் அமைதியாக இருக்கும்போதுதான் நமது குரலின் முக்கியத்துவத்தை உணர்கிறோம். ▶ என்னால் மட்டுமே என் வாழ்க்கையை மாற்ற முடியும். ▶ பெண்கள் கல்வியைப் பெற வேண்டும் என்றால், அவர்கள் சமூகத்தின் ஒரு அங்கமாக இருக்க வேண்டும்.