News March 22, 2024

சாம்பியன் பட்டம் வென்ற 11 வயது சிறுவன்

image

ப்ராக் சர்வதேச செஸ் தொடரில் இந்தியாவின் இளம் வீரர் ஆன்ஷ் நந்தன் (11) சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். செக் குடியரசில் 6 ஆவது ப்ராக் சர்வதேச செஸ் தொடர் நடந்தது. இதில் எதிர்கால வீரர்கள் பிரிவில் 9 சுற்றில் 7இல் வென்ற ஆன்ஷ் நந்தன் 8.0 புள்ளியுடன் முதலிடம் பிடித்து கோப்பையைத் தட்டிச் சென்றார். அத்துடன் கேண்டிடேட் மாஸ்டர் டைட்டிலைப் பெறவும் ஆன்ஷ் நந்தன் தகுதி பெற்றிருக்கிறார்.

Similar News

News May 8, 2025

பாக்., அமைதியை விரும்பவில்லை: ராணுவம்

image

பாகிஸ்தான் அமைதியை விரும்பவில்லை என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. அபரேஷன் சிந்தூர்-ன் இலக்கு பாக்., ராணுவம் இல்லை என தெளிவுபடுத்தி இருந்தோம். இருப்பினும் பாகிஸ்தான், ஸ்ரீநகர், ஜம்மு உள்ளிட்ட இடங்களில் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில், 5 குழந்தைகள் உட்பட 16 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். இதற்கு பதற்றம் அதிகரிக்காத வகையில், இந்திய ராணுவம் பதிலடி கொடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 8, 2025

இப்படியும் நூதனமாக ATM-ல் ஏமாத்துறாங்க தெரியுமா?

image

POSDEC (Point of Sale Declining Charges) என்ற ஒரு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ATM-ல் எந்த பரிவர்த்தனையும் நடக்காமல், கார்டை மெஷினில் போட்டு எடுத்தால், ₹28.75 பிடித்தம் செய்யப்படும். அதாவது, ATM-க்கு போய் தப்பான PIN-ஐ போட்டாலோ, அக்கவுண்டில் பணம் இல்லாத போது யூஸ் பண்ணாலோ, இந்த POSDEC கட்டணம் வசூலிக்கப்படும். ICICI ATM கார்டை பிற வங்கியில் பயன்படுத்தும் போது மட்டுமே இந்த பிடித்தம் செய்யப்படுகிறது.

News May 8, 2025

10-ம் வகுப்பு தேர்வு முடிவு: 15-ம் தேதிக்கு முன்பு வெளியீடு?

image

10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு வருகிற 15-ம் தேதிக்கு முன்பு வெளியாக வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மாநிலம் முழுவதும் இன்று 12-ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகியுள்ளது. இதையடுத்து 10-ம் வகுப்பு தேர்வு முடிவு எப்போது வெளியாகும் என மாணவர்களிடையே எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில், அந்தத் தேர்வு முடிவு 15-ம் தேதி (அ) அதற்கு முன்பு வெளியாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது. என்ன ரெடியா?

error: Content is protected !!