News March 22, 2024

பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து எஸ்பி ஆய்வு

image

நாங்குநேரி சுங்கச்சாவடி அருகே வருகிற 25ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நெல்லை கன்னியாகுமரி வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இதற்காக 40 ஏக்கரில் பிரமாண்டமாக விழா மேடை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணியினை நெல்லை மாவட்ட எஸ்பி சிலம்பரசன் நாங்குநேரி ஏஎஸ்பி பிரசன்னா குமார் ஆகியோர் நேற்று (மார்ச் 21) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Similar News

News August 14, 2025

நெல்லை மக்களே விழிப்புணர்வுடன் இருங்க – காவல்துறை!

image

நெல்லையில் சைபர் கிரைம் மோசடிகள் அதிகரித்து வருகின்றன. குற்றப்பிரிவு போலீசார் பேசுவதுபோல வீடியோ அழைப்பில் “நீங்கள் டிஜிட்டல் முறையில் கைது செய்யப்படுகிறீர்கள்” என்றும், நீதிமன்றத்தில் இருந்து பேசுவதுபோல பணம் கேட்டு மிரட்டுவதாகவும் புகார்கள் அதிகரித்துள்ளன. www.cybercrime.gov.in -இல் புகார் அளிக்கலாம். நம்ம நெல்லை மக்கள் இதுக்கெல்லாம் அசர மாட்டோம்.. நம்ம மக்களுக்கு தெரியபடுத்த SHAREபண்ணுங்க!

News August 14, 2025

மாநகரில் இரவு காவல் பணி அதிகாரிகள் கைப்பேசி எண் அறிவிப்பு

image

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாத்தி மணி உத்தரவின் படி நெல்லை மாநகரில் இன்று இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் விபரம் காவல் சரகம் வாரியாக மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.

News August 14, 2025

மாவட்டத்தில் இன்று இரவு காவல் பணி அதிகாரிகள்

image

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் உத்தரவின் படி நெல்லை மாவட்டத்தில் இன்று இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் விபரம் காவல் சரகம் வாரியாக மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!