News December 1, 2024
இரவுக்குள் மழைநீர் அகற்றப்படும்: அமைச்சர்

சென்னையில் தேங்கியுள்ள மழைநீரை இரவுக்குள் அகற்ற பணிகள் நடைபெற்று வருகிறது என அமைச்சர் KKSSR ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் சென்னையில் மின்சாரம் தாக்கி 3 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்த அவர், மழையின் தாக்கம் குறையும் வரை சென்னையில் நிவாரண முகாம்களில் உணவு வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 24, 2025
Beauty Tips: முகம் Dull-ஆவே இருக்கா? ஒரு பொருள் போதும்

என்ன செய்தாலும் முகம் Dull-ஆகவே இருக்கிறதா? முகத்தைப் பொலிவாக வைக்க பச்சைப் பால் போதும். இதற்கு, முதலில் முகத்தை நன்றாகக் கழுவ வேண்டும். பிறகு, இரண்டு டீஸ்பூன் பச்சைப் பாலில், சிறிது தேன் கலந்து நன்றாகக் கலக்கி, அதை முகத்தில் பூச வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து, தண்ணீரில் முகத்தைக் கழுவ வேண்டும். இதை, தொடர்ந்து செய்து வந்தால் முகம் பொலிவுடன் இருக்கும். SHARE.
News August 24, 2025
அரசியல் சாசனத்தை காக்க சுதர்சன் ரெட்டி தேவை: CM

60 ஆண்டுகாலம் சட்டம், நீதி, நேர்மைக்காக அர்ப்பணித்த உன்னத மனிதர் சுதர்சன் ரெட்டி என CM ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். சென்னையில், நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், அரசியல் சாசனத்தை BJP சிதைக்க நினைக்கும் நிலையில், அதனை காக்க இவர் தேவை என கூறினார். மேலும், மத்திய அரசு கொண்டுவர நினைக்கும் தேசிய கல்வி கொள்கை, மனித மாண்புகளுக்கு எதிரானது என TN மக்களுக்காக பேசியவர் சுதர்சன் ரெட்டி என்றார்.
News August 24, 2025
TN-ல் எங்கும் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு அனுமதி இல்லை

TN-ல் எந்த இடத்திலும் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு அனுமதி இல்லை என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். ராமநாதபுரத்தில் 20 ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க ONGC-க்கு SEIAA அனுமதி வழங்கிய நிலையில், அதனை ரத்து செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். அத்துடன், TN-ல் இனி எப்போதும் ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படாது எனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.