News December 1, 2024
ஃபெஞ்சல் புயல் காரணமாக பொதுக்கூட்டம் ஒத்திவைப்பு

திமுக கழக பொதுச்செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் அறிவுறுத்தலின்படி ஃபெஞ்சல் புயல் காரணமாக இன்று 01.12.2024 ஞாயிற்றுக்கிழமை சித்தூர் பேருந்து நிலையம் காட்பாடியில் சுப.வீரபாண்டியன் கலந்து கொண்டு நடைபெற இருந்த பொதுக்கூட்டமானது தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுகிறது என்று காட்பாடி தொகுதி தி.மு.க சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 13, 2025
வேலூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

வேலூர் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று (ஆக.13) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளது. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கான தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம். (ஷேர் பண்ணுங்க)
News August 13, 2025
வேலூர்: டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு

வேலூர் கலெக்டர் சுப்புலட்சுமி இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் வரும் 15ம் தேதி சுதந்திர தினத்தினை ஒட்டி அனைத்து மதுக்கடைகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அன்றைய தினம் உத்தரவை மீறி மதுபானம் விற்பனை செய்வதாக தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News August 13, 2025
வேலூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

வேலூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் 4 லட்சத்தி 57 ஆயிரத்து 48 ரேஷன் அட்டைதாரர்கள் பொருட்கள் பெற்று வருகின்றனர். இதில் அத்தியாவசிய பொருட்கள் பெற விருப்பம் இல்லையெனில், தங்கள் குடும்ப அட்டையினை பொருளில்லா குடும்ப அட்டையாக மாற்றிக் கொள்ளலாம் என கலெக்டர் சுப்புலட்சுமி இன்று (ஆக.13 ) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.