News November 30, 2024

நண்பருக்கு உதவி செய்து உயிரை இழந்த மாணவர்

image

அமெரிக்காவில் இந்திய மாணவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அவரின் பெயர் சாய் தேஜா நுகருபு ஆகும். தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்த அவர், அமெரிக்காவில் எம்பிஏ படித்து கொண்டே, சிகாகோ கேஸ் மையத்தில் பகுதிநேர வேலை பார்த்தார். நண்பருக்கு பதிலாக கூடுதலாக வேலை செய்தபோது மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெறுகிறது.

Similar News

News April 29, 2025

மகள் முன் தாய் பாலியல் வன்கொடுமை..இளைஞர் கைது

image

டெல்லியில் மகள் முன்பு, அவரின் தாய் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். ஸ்வரூப் நகரில் உள்ள பண்ணை வீட்டில் பெண்ணும், மகளும் இரவில் முற்றத்தில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது சுவர் ஏறி குதித்து உள்ளே புகுந்த பக்கத்து வீட்டுக்காரர் தர்மேந்தர், அந்தப் பெண், மகளை கயிற்றால் கட்டிப் போட்டார். பின்னர் பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தார். புகாரின்பேரில் தர்மேந்தரை போலீஸ் கைது செய்துள்ளது.

News April 29, 2025

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஏப்ரல் 29) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

News April 29, 2025

மதுபிரியர்களே, எச்சரிக்கை!

image

மது அருந்துதல் மற்றும் புகைப்பிடித்தலால் மனநலம் பாதிக்கப்படுவதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். மது அருந்துவதால் மூளையின் அமிக்தாலா மற்றும் ஹிப்போகேம்பஸ் பகுதி சுருங்குகிறதாம். புகைப்பிடித்தலாலும் ஹிப்போகேம்பஸ் அளவு குறைகிறதாம். மொத்தத்தில் தீவிரமான மதுப்பழக்கமும், புகைப்பழக்கமும் சேர்ந்தால், மூளையின் செயல்திறன் குறைவதுடன், மனநலம் பாதிப்பது உறுதி என்கின்றனர் விஞ்ஞானிகள்.

error: Content is protected !!