News November 30, 2024
ஜனாதிபதியுடன் பழங்குடியினர் குழு புகைப்படம்

உதகை ராஜ்பவனில் நேற்று ( 29 தேதி ) குடியரசு தலைவர் திரௌபதி முர்மு முன்னிலையில், பழங்குடியினர் பங்கேற்ற கலாச்சார நடனங்கள் நடைபெற்றது. அப்போது குடியரசு தலைவருக்கு பழங்குடி கைவினைஞர் செதுக்கிய அவரது உருவ படத்தை, நீலகிரி ஆதிவாசி நல சங்க செயலாளர் எம் ஆல்வாஸ் வழங்கினார். மேலும், குடியரசு தலைவர், பழங்குடியினருக்கு நினைவு பரிசுகளை வழங்கினார் . அதை தொடர்ந்து குழு புகைப்படம் எடுக்கப்பட்டது.
Similar News
News August 19, 2025
நீலகிரி: மசினகுடி சாலையில் பள்ளத்தில் கவிழ்ந்த கார்

நீலகிரி மாவட்டம் மசினகுடி அருகே கூடலூர் மைசூர் தேசிய நெடுஞ்சாலை கார்குடி பகுதியில் ஒரு கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை மீறி எதிரில் இருந்த ரிவைடர் கம்பியை உடைத்துக் கொண்டு பள்ளத்தில் கவிழ்த்து விபத்துக்குள்ளானது. வாகன ஓட்டுனருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படுவதில்லை மேலும் பொக்லின் இயந்திரம் மூலம் வாகனத்தில் மீட்கப்பட்டதால் சிறிது நேரம் மைசூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
News August 18, 2025
நீலகிரி: உங்களுடன் ஸ்டாலின் முகாம் விபரம்

நீலகிரி மாவட்டத்தில் நாளை (19.08.2025) உங்களுடன் ஸ்டாலின் முகாம் குஞ்சப்பனை, குன்னூர், கோத்தகிரி, கோடநாடு, போன்ற பகுதிகளில் நடைபெற உள்ளது. இந்த முகாமில் இசேவை, ஆதார் சேவை, மருத்துவ சேவை என அனைத்தும் ஓரிடத்தில் கிடைக்க உள்ளதால் இப்பகுதிகளை சார்ந்த பொதுமக்கள் பயன்பெறுமாறு நீலகிரி மாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறையின் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
News August 18, 2025
விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு நிவாரண நிதி

நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். பல்வேறு விபத்துகளில் பெருங்காயம் அடைந்த ஆறு நபர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 50,000 காசோலை பயனாளிகளுக்கு வழங்கினார்.