News March 22, 2024
தஞ்சாவூரில் நாளை முதல்வர் பிரச்சாரம்!

மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திருச்சி மலைக்கோட்டையில் தொடங்கவுள்ளார். இதை தொடர்ந்து நாளை(மார்ச் 23) தஞ்சாவூர், நாகை என 20 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இது குறுத்து தனது x தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “மலைக்கோட்டையில் தொடங்குகிறேன்; டெல்லி செங்கோட்டையை I.N.D.I.A கூட்டணி பிடிப்பதில் இப்பிரச்சாரம் நிறைவுற வேண்டும் என முதல்வர் என பதிவிட்டுள்ளார்.
Similar News
News September 7, 2025
தஞ்சாவூரில் முக்கிய பதவியில் யார் யார்?

நமது தஞ்சை மாவட்டத்தில் முக்கிய பதவிகளில் இருப்பவர்கள் யார் யார்? அவர்கள் எந்த துறைகளில் பதவி வகித்து வருகின்றனர், என்பதை தற்போது பார்க்கலாம்.
⏩மாவட்ட ஆட்சியர்: பிரியங்கா பங்கஜம்,
⏩மாவட்ட வருவாய் அலுவலர்: தெ. தியாகராஜன்,
⏩திட்ட இயக்குநர்: முனைவர் மு.பாலகணேஷ்,
⏩காவல்துறை துணைத்தலைவர், தஞ்சாவூர் சரகம்: ஜியாவுல் ஹக்,
⏩காவல் கண்காணிப்பாளர்: இரா. இராஜாராம்,
மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News September 7, 2025
தஞ்சாவூர்: இரவு ரோந்து போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News September 6, 2025
தஞ்சை: கோழி பண்ணை அமைக்க மானியம் வேண்டுமா?

தஞ்சை மக்களே, நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் அரசு சார்பில் இலவச கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. இதன் மூலம் 250 கோழி குஞ்சுகள் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் கோழி கொட்டகை, உபகரணங்கள், 4 மாதங்களுக்கு தேவையான தீவனம் என மொத்த செலவில் 50 % மானியம் வழங்கப்படுகிறது. இதனை அருகில் உள்ள கால்நடை மருத்துவமனையில் விண்ணப்பித்து பெறலாம். இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.