News November 30, 2024
நாளை வங்கித் தேர்வுகள் நடைபெறாது

சென்னையில் நாளை நடைபெற இருந்த வங்கித் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. ஃபெஞ்சல் புயல் காரணமாக, சென்னையின் பல இடங்களிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதேபோல், நாளையும் கனமழை நீடிக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது. இதை கவனத்தில் காெண்டு, வங்கித் தேர்வுகள் தள்ளி வைக்கப்படுவதாகவும், புதிய தேதி பிறகு அறிவிக்கப்படும் என்றும் IIB&F அமைப்பு அறிவித்துள்ளது.
Similar News
News December 7, 2025
போருக்கு தயாராகிறதா வெனிசுலா?

அமெரிக்கா-வெனிசுலா இடையே போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில், வெனிசுலா புதிதாக 5,600 வீரர்களை ராணுவத்தில் சேர்த்துள்ளது. போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை என வெனிசுலா கப்பல்களை, USA தாக்கி வருகிறது. இதில், இதுவரை 87 பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், வெனிசுலாவின் எண்ணெய் வளங்களை கைப்பற்ற நடக்கும் USA-வின் சதி இது என்று குற்றஞ்சாட்டியுள்ள அதிபர் மதுரோ, ராணுவத்தை பலப்படுத்தி வருகிறார்.
News December 7, 2025
95% விமான சேவையை தொடங்கிய இண்டிகோ

இண்டிகோ விமான சேவை பாதிப்பால் கடந்த 6 நாட்களாக பெரும் பாதிப்பை பயணிகள் சந்தித்து வந்தனர். இந்நிலையில் 95% விமான சேவைகள் இன்று இயக்கப்பட்டு வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. சுமார் 1,500 விமானங்கள் இயக்கப்படுவதால் பயணிகளுக்கு இனி எந்த பாதிப்பும் இருக்காது என இண்டிகோ உறுதியளித்துள்ளது. முன்னதாக சேவை பாதிப்பு குறித்து அந்நிறுவனத்தின் CEO பீட்டர் எல்பர்ஸுக்கு <<18492959>>DCGA நோட்டீஸ்<<>> அனுப்பியுள்ளது.
News December 7, 2025
கரண்ட் பில்லை அதிகரிக்குமா பிரிட்ஜ் Magnet பொம்மைகள்?

பல டிசைன்களில், பல கலர்களில் பிரிட்ஜ்களில் Magnet பொம்மைகளை ஒட்டிவைப்பது பலரது வீட்டில் உள்ள பழக்கமாகும். ஆனால், இதனால் கரண்ட் பில் அதிகரிக்குமோ என்ற சந்தேகம் பலருக்கு உள்ளது. உண்மையில் இந்த Magnet பொம்மைகளால் கரண்ட் பில் ஏறாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த Magnet-களில் காந்தப்புலம் மிகவும் பலவீனமாக இருக்கும் என்பதால், இது பிரிட்ஜின் குளிரூட்டும் அமைப்பையோ, மோட்டாரையோ பாதிக்காது. SHARE IT.


