News November 30, 2024
தென்காசி டிஎஸ்பி ராமேஸ்வரத்திற்கு மாற்றம்

தென்காசி மாவட்ட குற்றப்பதிவு துறையின் துணை கண்காணிப்பாளராக சாந்தமூர்த்தி என்பவர் பணியாற்றி வந்த நிலையில், தமிழக காவல்துறை இயக்குனர் சங்கர் ஜிவால் உத்தரவின்படி, அவர் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் உட்கோட்ட காவல் துறை துணை கண்காணிப்பாளராக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என நேற்று(நவ.29) உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 2, 2025
தென்காசி: டிகிரி, டிப்ளமோ படித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு!

தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு துறையில் அப்ரண்டீஸ் பயிற்சிக்கான 79 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிப்ளமோ, B.E படித்தவர்கள் இப்பணிக்கு அக். 16க்குள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் தெரிந்துகொள்ள இங்கு <
News October 2, 2025
தென்காசி: கடைகள் ஏலம் அறிவிப்பு

தென்காசி நகராட்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள தினசரி சந்தையில் உள்ள 77 கடைகளை குத்தகை உரிமம் அனுபவித்துக் கொள்ள ஆணையாளர் அல்லது அவரது அதிகாரம் பெற்றவரால் ஏலம் விடப்பட உள்ளது. அக்டோபர் 24, 29 ஆகிய தேதிகளில் நடைபெறும் ஏலத்தில் கலந்து கொள்ள விரும்புவோர் ஏலம் நடைபெறும் நாளில் காலை 11 மணி வரை ஒப்பந்தப்புள்ளிகள் பெற்றுக்கொள்ளப்படும் என்றும், 11.30 மணிக்கு ஏலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News October 2, 2025
தென்காசி: ரயில் சேவையில் மாற்றம்

அக்டோபர் மாதம் மாற்றுப்பாதையில் இராஜபாளையம் வழி செங்கோட்டை – மயிலாடுதுறை (16848/16847) விரைவுவண்டி இயக்கம். இரயில் தண்டவாள மேம்பாட்டுப் பணிகள் காரணமாக செங்கோட்டை – மயிலாடுதுறை விரைவுவண்டி (16848) வழி: இராஜபாளையம் வரும் 03,04, 05,06, 07,09, 10,11,12, 13, 14,16,17,18,22,23,24,25,26,27,28,30,31ஆகிய தேதிகளிலும் இயக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே தகவல்.