News March 22, 2024

மயிலாடுதுறை பாமக வேட்பாளர் அறிவிப்பு!

image

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில், பாஜக கூட்டணி சார்பில் பாமக வேட்பாளராக ம.க.ஸ்டாலின் அறிவிக்கப்பட்டுள்ளார். மக்களவைத் தேர்தல் 2024 வரும் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக தமிழ்நாடு, புதுசேரியில் பாஜக கூட்டணி சார்பில் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 9 தொகுதிகளுக்கு பாமக சார்பில் தற்போது வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

Similar News

News September 9, 2025

உங்களுடன் ஸ்டாலின் முகாம்

image

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் வட்டாரம் நாச்சியார்கோயில் பகுதிகளுக்கு உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் (செப்டம்பர் 10) ஆம் தேதி புதன்கிழமை நாச்சியார்கோயில், அறிஞர் அண்ணா மண்டபத்தில் நடைபெறுகிறது. இந்த முகாமில் பொதுமக்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு தங்களது மனுக்களை கொடுத்து அரசின் நலத்திட்டங்களில் பங்கு கொண்டு பயனடையுமாறு தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் கேட்டுக்கொண்டுள்ளார்.

News September 9, 2025

உங்களுடன் ஸ்டாலின் முகாம் ஆட்சியர் அறிவிப்பு

image

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டாரம் வேப்பங்குளம் பகுதிகளுக்கு உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் (செப்டம்பர் 10) ஆம் தேதி புதன்கிழமை வேப்பங்குளம், ஸ்ரீ முத்து மாரியம்மன் கோயில் நடைபெறுகிறது. இந்த முகாமில் பொதுமக்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு தங்களது மனுக்களை கொடுத்து அரசின் நலத்திட்டங்களில் பங்கு கொண்டு பயனடையுமாறு தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் கேட்டுக்கொண்டுள்ளார்.

News September 8, 2025

பள்ளி வாகனத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்த ஆட்சியர்

image

தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியம் கட்டயங்காடு உக்கடை ஊராட்சி நடுவிக்குறிச்சி அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளிக்கு Dr.APJ அப்துல்கலாம் கிராம வளர்ச்சி குழு சார்பில் பள்ளி வாகனத்தினை மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் மற்றும் பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் என்.அசோக்குமார் அவர்கள் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.

error: Content is protected !!