News November 30, 2024
Marriage Functionல் புது Culture: Detox bar பாத்துருக்கீங்களா?

திருமணங்களில் Bachelor பார்ட்டி சர்வசாதாரணமாகி விட்டது. ஆனால், யாரும் ஹேங்கொவரில் மாட்டிக் கொள்ள கூடாது என்பதற்காக, Wedding Planners Detox bar, IV drips போன்றவற்றை வைக்க ஆரம்பித்து விட்டார்கள். Detox bar புத்துணர்ச்சியூட்டும் பானங்களை குறிக்கிறது. IV drips, Vitamins, Minerals உள்ளடக்கிய உடல் சத்துக்காக எடுத்துக் கொள்ளும் Anti-oxidants ஆகும். காசு இருக்குறவனுக்கு புது புது ஐடியா!!
Similar News
News August 21, 2025
கூட்டத்தை கட்டுப்படுத்த புதிய மசோதா நிறைவேற்றம்

RCB வெற்றிப் பேரணியின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தது தேசிய அளவில் சர்ச்சையானது. இந்நிலையில், 2025 கூட்ட கட்டுப்பாட்டு மசோதாவை கர்நாடக சட்டமன்றம் நிறைவேற்றியுள்ளது. இதன்படி, நிகழ்வின் நோக்கம், எதிர்பார்க்கப்படும் நபர்களின் எண்ணிக்கை, அதற்கேற்றார்போல் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஒரு விண்ணப்பமாக அளித்து, பொதுப்பணி உள்ளிட்ட சில துறைகளில் NOC சான்றும் பெற வேண்டும்.
News August 21, 2025
நீ அரியணை ஏறும் நாள் வரும்: விஜய் தாயார் வாழ்த்து

தமிழக வெற்றிக் கழகம், தடைகளை வெல்லும் கழகம் என்று நீ (விஜய்) காட்டு என ஷோபா சந்திரசேகர் வாழ்த்து கூறியுள்ளார். தவெக 2-வது மாநில மாநாட்டையொட்டி, திரையில் உன்னைப் பார்த்து உயர்த்திய தாய்மார்கள், தம்பி தங்கைகள் அரசியல் வெற்றிக்கு துணை நிற்கட்டும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் நீ அரியணை ஏறும் நாள் வரும், அதுவே உன் தொண்டர்களின் திருநாள் என்றும் உணர்ச்சிபொங்க தெரிவித்துள்ளார். வாகை சூடுவாரா விஜய்?
News August 21, 2025
BREAKING: தங்கம் விலை அதிரடி மாற்றம்

கடந்த ஒரு வாரமாக குறைந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிகரித்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹400 உயர்ந்து, ₹73,840-க்கும், கிராமுக்கு ₹50 உயர்ந்து ₹9,230-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிராம் வெள்ளியின் விலை ₹1 உயர்ந்து ₹126-க்கும், கிலோ வெள்ளி ₹1000 உயர்ந்து ₹1,26,000-க்கும் விற்பனையாகிறது.