News November 30, 2024
சென்னை விமான நிலையம் மூடல்

ஃபெஞ்சல் புயல் மற்றும் தொடர் கனமழை காரணமாக, சென்னை விமான நிலையத்தில் இன்று மாலை 5 மணி வரை எந்த விமானமும் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 90 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசி வருவதோடு, தொடர் கனமழை பெய்து வருவதால், பல நிறுவனங்கள் விமான சேவையை ரத்து செய்துள்ளன. மழைப்பொழிவு அதிகரித்து வருவதால் பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது.
Similar News
News April 28, 2025
பழைய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வருமா?

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அரசு இதனை கருத்தில் கொண்டு 3 வகை ஓய்வூதிய திட்டங்கள் குறித்து ஆராய குழு அமைத்திருந்தது. இந்த குழு செப்டம்பரில் தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்கும் என CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதனை அடுத்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டுவருவது குறித்து அரசு பரிசீலிக்கும்.
News April 28, 2025
மார்ட்டின் ஸ்கார்செஸி படத்தில் ஜான்வி கபூர்!

உலக சினிமாவின் ஜாம்பவான் மார்ட்டின் ஸ்கார்செஸி, ‘ஹோம்பவுண்ட்’ என்ற இந்தி படத்தில் Executive producer-ஆக இணைந்துள்ளார். கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட இருக்கும் ‘ஹோம்பவுண்ட்’ படத்தில் அவர் இணைந்திருப்பது, படத்தை உலக ரசிகர்களுக்கு கொண்டு செல்லும். கரண் ஜோகர் தயாரித்துள்ள இப்படத்தில், ஜான்வி கபூர், இஷான் கட்டர் ஆகியோர் நடித்துள்ளனர். மசான் படத்தை இயக்கிய நீரஜ் கைவான் இயக்கி உள்ளார்.
News April 28, 2025
9 தீவிரவாதிகளின் வீடுகள் ராணுவத்தால் தகர்ப்பு

ஜம்மு-காஷ்மீரில் இந்திய ராணுவத்தால் இதுவரை 9 தீவிரவாதிகளின் வீடுகள் இடித்து தள்ளப்பட்டுள்ளன. பஹல்காம் தாக்குதலுக்கு காரணமானவர்களாக சந்தேகிக்கப்படும் தீவிரவாதிகளின் வீடுகளை ராணுவம் வெடிகுண்டு வைத்தும், பொக்லைன் வைத்தும் தகர்த்து வருகிறது. நேற்று தீவிரவாதிகள் அமீர் நஷிர், ஷாஃபி, ஜமீல் அகமது ஆகியோரின் வீடுகளை ராணுவம் இடித்து தள்ளியது. அதேபோல் தீவிரவாதிகள் தேடுதல் வேட்டையும் நடக்கிறது.