News November 30, 2024

அயோத்தி அர்ச்சகர்களுக்கு கடும் கட்டுப்பாடு

image

அயோத்தி ஸ்ரீராம ஜென்மபூமி அறக்கட்டளை உறுப்பினர் அனில் மிஸ்ரா அர்ச்சகர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், அர்ச்சகர்கள் குடும்பத்தில் பிறப்பு, இறப்பு நிகழ்வுகள் ஏற்பட்டால், தீட்டுப்பட்ட அர்ச்சகர்கள் கோயில் நுழைவது தடை செய்யப்பட்டுள்ளது என கூறியுள்ளார். 6 மாத பயிற்சியை முடித்து கோயில் பணிகளில் ஈடுபடப்போகும் அர்ச்சகர்களுக்கு இந்த கண்டிப்பான கட்டுப்பாடுகளை அறக்கட்டளை விதித்துள்ளது.

Similar News

News December 8, 2025

பாதி கிணறு மட்டுமே கடந்துள்ளோம்: மு.க.ஸ்டாலின்

image

SIR பணியில் நாம் பாதி கிணற்றை மட்டுமே கடந்துள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். ‘என் வாக்குச் சாவடி – வெற்றி வாக்குச் சாவடி’ எனும் தலைப்பில் காணொலி வாயிலாக மாவட்ட செயலாளர்கள், நகரம், ஒன்றியம், பேரூர் நிர்வாகிகளிடம் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது, விடுபட்ட தகுதியான வாக்காளர்களை பட்டியலில் சேர்க்க திமுகவினர் மும்முரமாக பணியாற்ற வேண்டும் என நிர்வாகிகளுக்கு ஆணையிட்டுள்ளார்.

News December 8, 2025

இறந்த அம்மாவுக்காக.. 85 கிலோ உடல் எடையை குறைத்த மகன்!

image

தாயை இழந்த வேதனையில் இருந்த மகனை மேலும் நொறுக்கியது அவரது 160 கிலோ உடல் எடை. அவருக்கு பொருத்தமான பாதுகாப்பு உடை(PPE) இல்லாததால் மின் மயானத்தில் அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர், 2 PPE அணிந்து இறுதி கடமையை முடித்தவரின் மனதில், அன்று முதல் தணியாத தீ ஒன்று பற்றி எரிந்துள்ளது. கடுமையான உடற்பயிற்சி & டயட் மூலம் 85 கிலோ குறைத்து, இது தனது தாய்க்கு செலுத்தும் மரியாதை என துக்கத்துடன் கூறியுள்ளார்.

News December 8, 2025

வரலாறு காணாத சரிவு.. மிகப்பெரிய தாக்கம்

image

இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. 2014-ல் ₹62-ஆக இருந்த ரூபாய் மதிப்பு தற்போது ₹90-க்கும் கீழ் சென்றுள்ளது. மேலும், ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்தால், இறக்குமதி பொருள்களின் விலையில் எதிரொலிக்கும். குறிப்பாக, கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் விலை, சமையல் எண்ணெய் விலை, மின்னணு பொருள்கள், செல்போன், லேப்டாப், மருந்துகள், கார்களின் விலை அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.

error: Content is protected !!