News November 30, 2024

இன்று Ind vs Pak மேட்ச்: வைபவ் சூர்யவன்ஷி அசத்துவாரா?

image

UAE’யில் நேற்று தொடங்கிய, U-19 ஆசிய கோப்பையில் இன்று காலை 10:30 மணிக்கு இந்தியா – பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. பரம போட்டியாளர்களான இவ்விரு அணிகளும் மோதும் போட்டியை Sony Liv OTT நேரலை செய்கிறது. IPL ஏலத்தில் கவனத்தை ஈர்த்த 13 வயதேயான வைபவ் சூர்யவன்ஷி விளையாடுவதே இப்போட்டி கவனம் பெற முக்கிய காரணமாகும். ஏலத்தில் உண்டான எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வாரா வைபவ்?

Similar News

News December 8, 2025

டிசம்பர் 8: வரலாற்றில் இன்று

image

*1971 – இந்தியக் கடற்படை பாகிஸ்தானின் கராச்சி நகர் மீது தாக்குதலைத் தொடுத்தது. *1985 – சார்க் அமைப்பு இந்தியா, பாகிஸ்தான், வங்காள தேசம், இலங்கை, நேபாளம், மாலைதீவு மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளால் உருவாக்கப்பட்டது. *1947 – தமிழ் திரைப்பட இயக்குநர் கங்கை அமரன் பிறந்தநாள். *1953 – தமிழ் திரைப்பட நடிகர் மனோபாலா பிறந்தநாள். *2021 – இந்தியாவின் முதல் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உயிரிழந்தநாள்.

News December 8, 2025

ஹமாஸ் விவகாரத்தில் இந்தியாவுக்கு அழுத்தம்

image

ஹமாஸை தீவிரவாத இயக்கமாக இந்தியா அறிவிக்க வேண்டும் என இஸ்ரேல் வலியுறுத்தியுள்ளது. பாகிஸ்தானின் லஷ்கர் – இ – தொய்பா உடனான ஹமாஸின் உறவு தொடர்ந்து மேம்பட்டு வருவதாகவும் இஸ்ரேல் எச்சரித்துள்ளது. மேலும், பாலஸ்தீன அகதிகளுக்கான ஐநாவின் நிவாரண அமைப்புக்கு நிதி வழங்குவதையும் நிறுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது. வெளியுறவு கொள்கை காரணமாக, ஹமாஸை இன்னும் தீவிரவாத இயக்கமாக இந்தியா அறிவிக்கவில்லை.

News December 8, 2025

மீண்டும் ஒரு சயின்ஸ் ஃபிக்சன் படத்தில் SK

image

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கும் புதிய படத்தின் ஷூட்டிங் வரும் பிப்ரவரிக்குள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக முன் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருவதாக கூறப்படுகிறது. ‘அயலான்’ படத்தை தொடர்ந்து இந்த படமும் சயின்ஸ் ஃபிக்‌ஷன் ஜானரில் உருவாவதால், பெருமளவு கிராஃபிக்ஸ் பணிகள் இருக்கிறதாம். அதனால், US-ஐ சேர்ந்த பிரபல நிறுவனம் இப்படத்தில் இணைந்துள்ளதாம்.

error: Content is protected !!