News November 30, 2024
₹200க்கு நாட்டை காட்டிக் கொடுத்தவர்

தினமும் ₹200 பெற்றுக் கொண்டு, கடற்படை சார்ந்த தகவல்களை பாகிஸ்தான் உளவாளிக்கு பகிர்ந்த திபேஷ் கோஹிலை குஜராத் தீவிரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். ஒகா (Okha) துறைமுகத்தில் வேலை செய்து வந்த திபேஷ், அங்கு வரும் கடற்படையின் கப்பல்களின் பெயர், எண்களை பாக்., ஏஜெண்டிற்கு வாட்ஸ்அப் மூலம் அளித்து வந்துள்ளார். இதுவரை ₹42,000-ஐ அவர் பாக். ஏஜெண்டிடம் இருந்து பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.
Similar News
News August 21, 2025
ஆபத்தான முறையில் விஜய் தொண்டர்கள்..

மாநாட்டில் பங்கேற்க பல்வேறு மாவட்டங்களில் இருந்து அக்கட்சியின் தொண்டர்கள், குவிந்த வண்ணம் இருக்கின்றனர். குறிப்பாக, விஜய்யின் பேச்சை கேட்கவும், அவரை பார்க்கவும் மிகுந்த ஆவலுடன் இருக்கும் தொண்டர்கள் முன் வரிசையில் இடம் பிடிக்க துடிக்கின்றனர். இதனால் மாநாட்டு பந்தலுக்குள் செல்ல முறையான பாதைகளை விட்டு விட்டு 10 அடி உயர தடுப்புகளை தாண்டி ஆபத்தான முறையில் தொண்டர்கள் செல்கின்றனர்.
News August 21, 2025
Health Tips: சப்பாத்தி மாவை ஃப்ரிட்ஜில் வைத்தால் விஷமா?

சப்பாத்தி மாவை பிசைந்த பிறகு அதை சமைக்காமல் ஃப்ரிட்ஜில் வைக்கிறோம். இவ்வாறு செய்வதால் அது விஷமாகும் என டாக்டர்கள் கூறுகின்றனர். ஃப்ரிட்ஜின் குளிர்ந்தநிலை பூஞ்சை வளர்ச்சியை மெதுவாக்குகிறது. இதனால் காற்று புகாத அளவுக்கு மாவை pack செய்து, அதை 1 நாள் வரை ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம் எனவும், 2 நாள்களை தாண்டினால் அது நமது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் எனவும் டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.
News August 21, 2025
INDIA கூட்டணியின் ஒரே அரசியலமைப்பு ‘ஊழல்’

‘PM, CM பதவி பறிப்பு’ மசோதாவை ‘கருப்பு மசோதா’ என CM ஸ்டாலின் விமர்சித்திருந்தார். இந்நிலையில், 130-வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு நீங்கள் எதிர்ப்பு தெரிவிப்பது ஆச்சரியமல்ல என அண்ணாமலை தெரிவித்துள்ளார். உங்கள் கூட்டணி (INDIA) உண்மையிலேயே பின்பற்றும் ஒரே அரசியலமைப்பு ஊழல் மட்டுமே என்றும் அவர் விமர்சித்துள்ளார். செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக திமுக அரசு தக்க வைத்ததாகவும் சாடியுள்ளார்.