News March 22, 2024
பூட்டான் புறப்பட்டார் பிரதமர் மோடி

2 நாள் அரசுமுறை பயணமாக பிரதமர் மோடி பூட்டான் நாட்டிற்கு புறப்பட்டு சென்றார். மோசமான வானிலை காரணமாக நேற்று இந்தப் பயணம் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே இருக்கும் பூட்டான் எனும் குட்டி நாடு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆகையால் அவர்களுடன் எப்போதும் நட்பு பாராட்டும் இந்தியா, இப்போதும் அந்த உறவைத் தொடர்கிறது. அங்கு பூட்டான் மன்னரை சந்தித்து பேசவிருக்கிறார் மோடி.
Similar News
News October 23, 2025
நடிகை மனோரமாவின் மகன் காலமானார்

தமிழ் திரையுலகில் மறக்க முடியாத எவர்கிரீன் நடிகையான மனோரமாவின் மகன் பூபதி(70) காலமானார். மூச்சு திணறல் பிரச்னைக்காக கடந்த வாரம் சென்னையில் உள்ள தனியார் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பிறகு வீட்டில் ஓய்வில் இருந்த நிலையில், சற்றுமுன் அவரது உயிர் பிரிந்தது. இவர், விசுவின் ‘குடும்பம் ஒரு கதம்பம்’ படத்தில் அறிமுகமாகி பல படங்கள், சீரியல்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார்.
News October 23, 2025
BREAKING: 14 மாவட்டங்களில் இன்று கனமழை

கோவை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, நீலகிரி, திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. அதேபோல், நாளை(அக்.24) கோவை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
News October 23, 2025
2045-ல் விண்வெளியில் வசிப்போம்: ஜெப் பெசோஸ்

இன்னும் 20 வருஷம் தான். நாம் எல்லாரும் விண்வெளியில் வீடு கட்டிவிடுவோம் என்கிறார் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ். 2045-க்குள் லட்சக்கணக்கான மக்கள் விண்வெளியில் வசிப்பார்கள் என்று கணிக்கும் பெசோஸ், நிலவு மற்றும் பிற கோள்களில் ரோபோக்கள் வேலை செய்வார்கள் என்றும் கூறுகிறார். AI வேலைகளை பறிக்காது என்றும், அது சமூகத்திற்கு அதிக செழிப்பையே கொடுக்கும் எனவும் ஜெப் பெசோஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.