News November 30, 2024
‘மகாராஜா’ படத்திற்கு SK வாழ்த்து

விஜய் சேதுபதி, நிதிலன் சுவாமிநாதன் கூட்டணியில் தமிழில் வெளியான ‘மகாராஜா’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றது. படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அதை சீன மொழியில் டப்பிங் செய்து சீனாவில் இன்று வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் சீன மொழியில் வெளியான ‘மகாராஜா’ படம் பெற்றி பெற வேண்டும் என சிவகார்த்திகேயன் X தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். சீனாவில் சாதிப்பாரா மகாராஜா?
Similar News
News August 21, 2025
தோள்பட்டை வலியை விரட்டும் பரிவர்த்த திரிகோணாசனம்!

✦கால்கள், முதுகு & தோள்பட்டை வலுவாகும்.
➥முதலில் இரு கால்களையும் விரித்து, ஒரு காலை சற்று முன்னே வைத்து, கைகள் இடுப்பில் வைக்கவும்.
➥கால்களை நகர்த்தாமல், முதுகை வளைத்து கைகளை தரையில் வைக்கவும். பிறகு பழைய நிலைக்கு திரும்பவும்.
➥முதுகை நேராக்கி, ஒரு கையை கீழே நோக்கி நீட்டி , மற்றொரு கையை மேலே உயர்த்தவும். வலது கால் முன்னோக்கி இருந்தால், இடது கையை மேலே உயர்த்தி இருக்க வேண்டும்.
News August 21, 2025
CM ஸ்டாலின் CPR-யை ஆதரிக்க வேண்டும்: நயினார்

தமிழ் பண்பாடு, தமிழர் கலாச்சாரம் என பேசி வரும் CM ஸ்டாலின், துணை ஜனாதிபதி தேர்தலில் CPR-யை ஆதரிக்கவில்லை என்றால், அவர் பேசியது வெற்று வார்த்தையாகிவிடும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். 30 நாட்கள் சிறையில் இருக்க நேரிட்டால் பதவி இழக்க நேரிடும் என்ற சட்டம் எதிர்க்கட்சிகளை மிரட்டுவதற்காக கொண்டு வந்தது இல்லை என கூறிய அவர், அது ஆளுங்கட்சிக்கும் பொருந்தும் என்றார்.
News August 21, 2025
அல்லு அர்ஜுன் – அட்லி படத்தில் இணைந்த பிரபல நடிகர்?

ஜவான் வெற்றிக்கு பின் அல்லு அர்ஜுன் நடிக்கும் பெயரிடப்படாத படத்தை அட்லி இயக்குகிறார். பிரமாண்டமான பொருட்செலவில் தயாராகி வரும், இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு முன் ஹிந்தியில் அட்லி இயக்கத்தில் வெளியான ஜவான் படத்திலும் விஜய்சேதுபதி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.