News November 30, 2024
சட்டம் அறிவோம்: BNS பிரிவு 84 சொல்வது என்ன?

யாரேனும் திருமணமான பெண்ணை முறைகேடான உறவில் ஈடுபடும் தவறான எண்ணத்தில் வசீகரித்து கவர்ந்து செல்லுதல் (அ) குற்ற நோக்கத்துடன் அழைத்துச் செல்லுதல் (அ) தடுத்து (அ) மறைத்து (அ) ஒளித்து வைத்தல் BNS சட்டப்பிரிவு 84 சட்டப்படி குற்றமாகும். பெண்களுக்கு எதிரான இத்தகைய குற்றங்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படக்கூடிய சிறைத் தண்டனை (அ) அபராதம் (அ) இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.
Similar News
News April 26, 2025
திமுக-வின் அலட்சியத்தால் உயிரிழப்பு: இபிஎஸ்

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே கோயில் திருவிழாவின் போது ஏற்பட்ட பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்துக்கு இபிஎஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் திமுக ஆட்சியில் கோயில் திருவிழாக்களில் உரிய நெறிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை எனவும் குற்றம்சாட்டினார். உயிரிழந்தோர் குடும்பத்துக்கு நிவாரண உதவியை உயர்த்தி வழங்கவும் இபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.
News April 26, 2025
கஸ்தூரி ரங்கன் மறைவுக்கு CM ஸ்டாலின் இரங்கல்

இஸ்ரோ Ex தலைவர் <<16213450>>கஸ்தூரி ரங்கன்<<>> மறைவுக்கு CM ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். விண்வெளி துறையில் இந்தியா மிகப் பெரும் உயரங்களை அடைவதற்கு வித்திடும் வகையில் பணியாற்றியவர் அவர் என புகழாரம் சூட்டியுள்ளார். விஞ்ஞானியாக மட்டுமின்றி திட்டக்குழு உறுப்பினர் உள்ளிட்ட உயர் பொறுப்புகளை அவர் வகித்துள்ளதாக தெரிவித்த CM ஸ்டாலின், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
News April 26, 2025
இந்தியாவின் பாக். மருமகளுக்கு அடைக்கலம் கிடைக்குமா?

2023-ல் பாக். ல் இருந்து நேபாளம் வழியாக உ.பி வந்து தனது காதலரான சச்சின் மீனாவை மணந்தவர் சீமா ஹைதர். இந்த தம்பதிக்கு சமீபத்தில் குழந்தையும் பிறந்தது. பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானியர்களின் விசாக்களுக்கு இந்தியா கெடு விதித்துள்ள நிலையில், தான் பாகிஸ்தானின் மகள், ஆனால் இந்தியாவின் மருமகள் எனக் கூறும் சீமா, தன்னை இங்கேயே இருக்க அனுமதிக்குமாறு அரசிடம் சட்ட ரீதியாக முறையிட்டுள்ளார்.