News November 30, 2024
தாம்பரம் மாநகர காவல் சார்பில் வெள்ள தடுப்பு கட்டுப்பாட்டு அறை

பெங்கால் புயல் காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இந்நிலையில் தாம்பரம் மாநகர காவல் ஆணையரகம் சார்பில் வெள்ள தடுப்பு கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் பகுதியில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 9, 2025
செங்கல்பட்டு: சாலையில் மூதாட்டிக்கு நடந்த சோகம்!

மறைமலைநகர் ரயில் நிலையம் எதிரே ஜி.எஸ்.டி சாலை சிக்னலில் நேற்று 80 வயது மூதாட்டி சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த பஸ் மூதாட்டி மீது மோதி அவர் சம்பவ இடத்துலயே பலியானார். உடனே போலீசார் அங்கு வந்து உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணையில் மூதாட்டியின் பெயர் கன்னியம்மாள் என்று தெரிய வந்துள்ளார், கூடுதல் விவரங்களை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News December 9, 2025
செங்கல்பட்டு: கத்தி முனையில் அரங்கேறிய பயங்கர சம்பவம்!

பொத்தேரியை சேர்ந்த தஷ்வந்த் அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் பொத்தேரி கல்லூரி சாலையில் நடந்து செல்லும் போது திடிரென்று மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்து தஷ்வந்தை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர். மேலும் அவரிடம் இருந்த செல் போன் மற்றும் கையில் இருந்த பணத்தை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News December 9, 2025
செங்கல்பட்டு: விளையாட்டே வினையாய் அமைந்த சோகம்

மாங்காடு அடுத்த மலையம்பாக்கத்தைச் சேர்ந்த சதீஷின் மகள் சாலினி ஸ்ரீ (6), தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று வீட்டின் முன் சாலினி விளையாடிக்கொண்டிருந்தபோது, கால் தடுமாறி விழுந்ததில் நெற்றியில் காயமடைந்து மயங்கியுள்ளார். அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, சாலினி ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் பெற்றோர்சாலினி உடலை பார்த்து கதறி அழுதனர்.


