News November 29, 2024

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல் 

image

வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் நாளை காரைக்கால் – மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும்போது பலத்த காற்று வீசும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இதையடுத்து கலெக்டர் அருண்ராஜ் பொதுமக்கள் யாரும் தேவையில்லாமல் வெளியில் வரவேண்டாம், கடற்கரையோரம் செல்ல கூடாது, மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் அருகில் நிற்க கூடாது என அறிவுறுத்தியுள்ளார். புயல் பாதிப்பு குறித்து உதவி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. 

Similar News

News December 7, 2025

செங்கல்பட்டு மக்களே இந்த WEEKEND பிளான் ரெடி

image

செங்கல்பட்டு கிழக்கு கடற்கரை சாலையில் முட்டுக்காட்டில் தட்சிணசித்ரா என்ற அருங்காட்சியகம் உள்ளது. இங்கு ஒட்டுமொத்த தென்னிந்தியாவின் கலை, கட்டிடக்கலை, கலாச்சாரம், கைவினை மற்றும் வாழ்க்கை முறையை சித்தரிக்கும் 18 வீடுகள் உள்ளன. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா என தென் மாநிலத்தின் கலை பொருட்களை காணலாம். நுழைவு கட்டணம் ரூ.20- 110 மட்டுமே. விசிட் பண்ணுங்க. நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News December 7, 2025

செங்கல்பட்டு: முதியவரிடம் கோடி கணக்கில் மோசடி 3 பேர் கைது

image

தாம்பரத்தைச் சேர்ந்த 62 வயது சந்திரன் என்பவரிடம், ‘வங்கி கணக்கு மோசடி, டெல்லி போலீஸ் வழக்கு, டிஜிட்டல் கைது’ எனக் கூறி மிரட்டி ரூ.2.25 கோடியை மர்ம நபர்கள் மோசடி செய்தனர். இது தொடர்பாக, ஏற்கனவே 2 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்த நிலையில், மேலும் 3 பேர் (அக்‌ஷய் சுந்தர் ராவ், நஜ்ருல் அலி, மொபரோக் ஹூசைன்) கைது செய்யப்பட்டனர். சந்திரனிடம் ரூ.6 லட்சம் வழங்கப்பட்டது.

News December 7, 2025

செங்கல்பட்டு: இன்றைய ரோந்துக் காவல் விவரம்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று(டிச.6) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!