News November 29, 2024
மீண்டு வாருங்கள், சமந்தா!

நடிகை சமந்தாவுக்கு கடந்த சில ஆண்டுகளாகவே சோதனை மேல் சோதனையாகவே உள்ளது. விவாகரத்தில் முடிந்த காதல் திருமணம், ஒட்டுமொத்தமாக முடக்கிப் போட்ட மயோசிடிஸ் பாதிப்பு, அடுத்தடுத்த சர்ச்சைகள் எல்லாமும் அவரை மனம், உடல் ரீதியாக பலவீனப்படுத்தின. எனினும், அவற்றிலிருந்து மீண்டு வந்தவருக்கு, தந்தையின் மரணம் பேரிழப்பாக அமைந்துவிட்டது. மனம் தளர வேண்டாம் சமந்தா! உறுதியாக மீண்டு வாருங்கள்!
Similar News
News April 26, 2025
பொன்முடியை மறைமுகமாக அட்டாக் செய்த கனிமொழி

அமைச்சர் பொன்முடி சமீபத்தில் பெண்களை மோசமாக பேசியது பெரும் சர்ச்சையானது. இந்நிலையில், பெண்களை இழிவாகப் பேசுபவர் சுயமரியாதைக்காரராக இருக்க மாட்டார் என்று பொன்முடியை கனிமொழி மறைமுகமாக அட்டாக் செய்துள்ளார். மதவாதிகள் சிலர் தாங்கள் உருவாக்கிய கட்டமைப்பை உடைக்கக் கூடாது என நினைக்கின்றனர் எனக் கூறிய அவர், தவறான அரசியல் மூலம் தமிழ்நாட்டில் சாதி என்பது மெல்ல நுழைகிறது; அதை தவிர்க்க வேண்டும் என்றார்.
News April 26, 2025
ராகு, கேது பெயர்ச்சி: வீட்டில் விளக்கு ஏற்றுங்கள்

இன்று மாலை ராகு பகவான், மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கும், கேது பகவான் கன்னி ராசியில் இருந்து சிம்ம ராசிக்கும் பெயர்ச்சி அடைந்துள்ளனர். எனவே, மேஷம், மிதுனம், கன்னி, தனுசு, மீனம், துலாம் ராசிக்காரர்கள், வீட்டின் தென்மேற்கு மூலையில், நல்லெண்ணை விளக்கு ஏற்றி துர்க்கை அம்மனை வழிபாடு செய்யுங்கள். குறிப்பாக, நாளை காலை 7:30 – 8:30 அல்லது மாலை 4:30 – 6:00 விளக்கு ஏற்றினால் பல நன்மைகள் கிடைக்கும்.
News April 26, 2025
IPL: PBKS முதலில் பேட்டிங்

இன்றைய ஐபிஎல் போட்டியில் KKR, PBKS அணிகள் மோதவுள்ளன. கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில், டாஸ் வென்ற PBKS கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பேட்டிங்கை தேர்வு செய்தார். புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்தில் இருக்கும் PBKS அணி, இப்போட்டியில் வெற்றி பெற்று முதல் நான்கு இடங்களை பிடிக்கும் முனைப்போடு களம் இறங்குகிறது.