News November 29, 2024

BREAK UP செய்வது குற்றமே அல்ல: சுப்ரீம் கோர்ட்

image

8 ஆண்டுகளாக காதலித்துவிட்டு திருமணம் செய்ய மறுத்ததால், கர்நாடகாவை சேர்ந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, அந்த இளைஞருக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து அவர் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு, இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பிரேக் அப் செய்வது துன்பத்தை ஏற்படுத்தும் என்றாலும், அது தற்கொலைக்கு தூண்டக்கூடிய குற்றம் அல்ல என சுப்ரீம் கோர்ட் தெரிவித்தது.

Similar News

News April 27, 2025

இனி பான், ஆதாரில் ஒரே நேரத்தில் பெயர் மாற்றலாம்!

image

பான், ஆதார், வாக்காளர் அட்டை என இவற்றில் ஏதேனும் ஒன்றில் பெயரை மாற்றவே பெரும்பாடு படவேண்டிய சூழல் இனி இல்லை. ஒரே நேரத்தில் அனைத்து அரசு அடையாள அட்டைகளிலும் பெயரை மாற்றிக்கொள்ளலாம். இதற்கான, ஒரு ஒருங்கிணைந்த ஒரு டிஜிட்டல் போர்ட்டலை விரைவில் மத்திய அரசு கொண்டுவரவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. பெயர் மட்டுமின்றி மக்கள் தங்கள் முகவரி, எண் போன்றவற்றை ஒரே இடத்தில் புதுப்பிக்க முடியும். காத்திருப்போம்!

News April 27, 2025

மருத்துவ பொருள்களைப் பெற போராடும் பாகிஸ்தான்!

image

பாகிஸ்தான் மேலும் ஒரு சிக்கலை சந்தித்துள்ளது. அந்நாட்டில், ஒரு ‘மருத்துவ அவசரநிலை’ எழுந்திருப்பதாக தகவல்கள் வெளிவருகின்றன. இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் ரத்தானதை அடுத்து, புற்றுநோய், ரேபிஸ் போன்ற சில நோய்களின் மருந்துகளை சேமிக்க அந்நாட்டின் Ministry of Health அறிவுறுத்தியுள்ளது. பாகிஸ்தான் தற்போது அதன் மருந்து தேவைகளில் 30% – 40% வரை இந்தியாவை நம்பியுள்ளது.

News April 27, 2025

அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

image

தமிழகத்தில் இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்பிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை IMD வெளியிட்டுள்ளது. அதன்படி, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், மதுரை, திண்டுக்கல், தேனி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருச்சி, கரூர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

error: Content is protected !!