News November 29, 2024

ஃபெஞ்சல் புயல்: ALERT மெசேஜ் வந்து விட்டதா மக்களே

image

பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்கும்படி தமிழக அரசு, செல்போன் எண்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி எச்சரித்துள்ளது. நாளை பிற்பகல் ஃபெஞ்சல் புயல் கரையை கடக்கும்போது, 70 -90 கி.மீ. வேக காற்றுடன் கனமழை – அதி கனமழை பெய்யக்கூடும். எனவே, பொதுமக்கள் வீட்டில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அலர்ட் கொடுத்துள்ளது. இதனால், அத்தியாவசிய பொருட்களை வாங்கி, மக்கள் இருப்பில் வைத்துக் கொள்வது நல்லது.

Similar News

News April 27, 2025

ரேஷன் பருப்பில் கலப்படமா? ஆய்வு செய்ய உத்தரவு

image

ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட இருந்த பருப்பில் கலப்படம் செய்யப்பட்டதை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அண்மையில் கண்டுபிடித்தார். இதுதொடர்பாக 2 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த செய்திகள் வெளியானதையடுத்து, மாநிலம் முழுவதும் உள்ள வாணிப கிடங்குகள், ரேஷன் கடைகளில் ஆய்வு செய்து, பருப்பின் தரத்தை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு உணவுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

News April 27, 2025

ஆபீசை மூடிட்டு கிளம்பிய சிறுத்தை சிவா!

image

திரைத்துறையில் ஜாதகம், ராசி நட்சத்திரம் போன்ற சென்டிமென்ட் உண்டு. அப்படிதான் ‘கங்குவா’ படத்திற்கு பிறகு இந்த இடம் ராசியில்லை என சிறுத்தை சிவா, தனது ஆபீசை காலி செய்து விட்டாராம். அவர் வீரம் படத்தின் வேலைகளை தொடங்கியதில் இருந்தே அந்த ஆபீசில் தான் இருந்தாராம். இரு படங்கள் வரிசையாக தோல்வி என்றாலும், வீரம், வேதாளம், விஸ்வாசம் போன்ற பிளாக் பஸ்டர் படங்களை அந்த ஆபீசில் இருக்கும் போது தானே எடுத்தார்!

News April 27, 2025

சூழும் போர் மேகம்..அமித்ஷா-BSF இயக்குநர் சந்திப்பு

image

இந்தியா-பாக். எல்லையில் பதற்றம் நிலவிவரும் நிலையில், எல்லை பாதுகாப்பு படையின்(BSF) இயக்குநர் தல்ஜித் சிங் சௌதரி, உள்துறை அமைச்சகத்துக்கு வருகை தந்துள்ளார். முன்னதாக, பாக். எல்லையில் உள்ள விவசாயிகள் பயிர்களை 48 மணி நேரத்திற்குள் அறுவடை செய்ய வேண்டுமென BSF காலக்கெடு விதித்திருந்தது. இந்நிலையில், உள்துறை அமைச்சகத்துக்கு BSF இயக்குநரின் வருகை, முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!