News November 29, 2024

இதயமே இல்லாமல் வாழ்ந்த உலகின் முதல் மனிதன்!

image

நம்மில் யாராவது ஈவு இரக்கமற்ற செயலை செய்தால் உனக்கு இதயம் இல்லையா எனக் கேட்பதுண்டு. ஆனால், உண்மையில் இதயம் இல்லாத ஒருவரை உங்களுக்குத் தெரியுமா? 2011இல் கிரேக் லூயிஸ் என்ற 55 வயது நபருக்கு amyloidosis நோய் காரணமாக இதயம், சிறுநீரகம், கல்லீரல் செயலிழந்தது. இதையடுத்து, டெக்சாஸ் ஹார்ட் இன்ஸ்டிடியூட் மருத்துவர்கள், அவரது இதயத்துக்குப் பதிலாக கருவியைப் பொருத்தி, சில நாள்கள் வாழ சிகிச்சை அளித்தனர்.

Similar News

News August 23, 2025

அனைவரும் தூய்மை பணிக்கு வர வேண்டும்: திருமாவளவன்

image

அனைத்து சமூகத்தினரும் தூய்மை பணி செய்ய முன்வர வேண்டும் என திருமாவளவன் கூறியுள்ளார். சென்னையில், பணியின்போது மின்சாரம் தாக்கி பலியான தூய்மை பணியாளர் வரலட்சுமியின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் பேசிய அவர், வரலட்சுமியின் குழந்தைகளின் கல்வி செலவை அரசு ஏற்க வேண்டும் எனவும் சென்னையில் விரைவாக மின்சார கேபிள்களை புதை வடிவில் மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

News August 23, 2025

ரேஷன் கார்டுக்கு ₹5,000.. தமிழக அரசு வழங்குவது உறுதி?

image

<<17478371>>ரேஷன் கார்டுக்கு ₹5,000 <<>>வழங்க TN முடிவு செய்திருப்பதாக 2 நாள்களாக தகவல் பரவி வருகிறது. இதுகுறித்து பேசிய கூட்டுறவுத் துறை அதிகாரி ஒருவர், தீபாவளி பரிசாக மோடி ஜிஎஸ்டி குறைப்பை வெளியிட இருப்பதால், அதற்கு போட்டியாக தமிழக அரசும் தயாராகி வருவதாக குறிப்பிட்டுள்ளார். பொங்கலுக்கு 2 மாதங்களுக்கு முன்பே தீபாவளி நேரத்தில் பொங்கல் பரிசாக ₹5,000 வழங்கும் அறிவிப்பை TN அரசு வெளியிட இருப்பதாக தெரிவித்துள்ளார்.

News August 23, 2025

அமித் ஷாவுடன் CP ராதாகிருஷ்ணன் சந்திப்பு

image

டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை NDA துணை ஜனாதிபதி வேட்பாளர் CP ராதாகிருஷ்ணன் மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளார். இது பற்றி X தளத்தில் பதிவிட்டுள்ள அமித் ஷா, CP ராதாகிருஷ்ணன் அனுபவமிக்க தலைவர் எனவும் நிர்வாகத் திறன் கொண்டவர் எனவும் புகழாரம் சூட்டியுள்ளார். சிபிஆர் தேச நலனுக்காக அளப்பரிய தொண்டாற்றுவார் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

error: Content is protected !!