News November 29, 2024

ராமநாதபுரம் நாட்டுப்புற கலைஞர்களுக்கு அரிய வாய்ப்பு

image

கலைப் பண்பாட்டு துறையின் கீழ் 2025 ஜனவரி பொங்கல் பண்டிகை அன்று மதுரையில் சங்கமம் நம்ம ஊரு திருவிழா நடைபெற உள்ளது. அதற்கு ராமநாதபுரத்தைச் சேர்ந்த நாட்டுப்புற கலை குழுக்கள் கலந்து கொள்ளலாம். www.artandculture.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தங்களது திறமைகளை 5 நிமிட வீடியோவாக எடுத்து சிடி அல்லது பென்டிரைவில் விண்ணப்பத்துடன் படத்தில் காணும் முகவரிக்கு அனுப்ப வைக்க வேண்டும்.

Similar News

News December 9, 2025

ராமநாதபுரம்: உங்க ரேஷன் கடை திறந்து இருக்கா?

image

ராமநாதபுரம் மக்களே, உங்கள் ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை தெரிஞ்சுக்க அலையவேண்டிய அவசியம் இல்லை. இனி வீட்டிலிருந்தே தெரிஞ்சுக்க சூப்பரான வழி. உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்புங்க. கடை திறப்பு தகவல்கள் உங்க போனுக்கே வரும். ரேஷன் தொடர்பான புகார்களை பதிவு செய்ய, PDS 107 என டைப் செய்து அனுப்புங்க.SHARE பண்ணுங்க.

News December 9, 2025

ராமநாதபுரத்தில் ஒரே நாளில் 491 பேர் கைது

image

ராமநாதபுரத்தில் ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் நேற்று யூனியன் அலுவலகம் முன்பு வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர் .நீர்த்தேக்கத்தொட்டி சுத்தம் செய்வதற்கு கிளீனி ங் அலவனஸ் ரூ.300 வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி மறியல் போராட்டம் நடத்திய நிலையில் 191 பேரை போலீசார் கைது செய்தனர்.அதே போல் முதுகுளத்துாரில் மறியல் போரட்டத்தில் ஈடுபட்ட 300 பேரையும் கைது செய்தனர்.

News December 9, 2025

ராமநாதபுரம்: 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் கவனத்திற்கு

image

ராமநாதபுரம், பரமக்குடி, ராமேஸ்வரம், முதுகுளத்தூர், கடலாடி, திருவாடனை ஆகிய வட்டங்களில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் இன்று (டிச.09, செவ்வாய்க்கிழமை) முதல் 18 வயது பூர்த்தியடைந்தவர்களின் வாக்காளர் சேர்க்கை விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. ஆதார் கார்டு, புகைப்படம், பிறப்புச் சான்றிதழ், பள்ளி TC ஆகியற்றுடன் பள்ளிகளில் உள்ள BLO அதிகாரிகளிடம் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!