News November 29, 2024
வானில் திடீரென பறந்தது என்ன? நடுங்கும் US

ஹாலிவுட் படங்களை போல, விசித்திரமான நிகழ்வுகள் ஏனோ அமெரிக்காவில்தான் நடக்கின்றன. அப்படித்தான் நேற்று நள்ளிரவு, நியூயார்க் வான் பகுதியில் 4 லைட்டுகள் திடீரென தோன்றி பறந்தன. அங்கு விமானங்களும் பறக்கவில்லை என்பதும் உறுதியாகியுள்ளது. அப்படியெனில், அவை ஏலியன்களின் விமானங்களா என கேள்வியெழும்பியுள்ளது. அமெரிக்காவில் ஏலியன் கண்காணிப்பு துறை சமீபத்தில் உருவாக்கப்பட்டது.
Similar News
News December 8, 2025
வெறும் வயிற்றில் தேங்காய்: இவ்வளவு நன்மைகளா?

தினமும் காலையில் வெறும் வயிற்றில் 40-50 கிராம் தேங்காய் சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைப்பதாக டாக்டர்கள் கூறுகின்றனர். *எலும்பு பிரச்னைகள் வருவதில்லை. *கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து, செரிமான பிரச்னைகளுக்கு தீர்வு காண்கிறது. *சரும பொலிவு, முடி வளர்ச்சிக்கு நல்லது * நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் *ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும். அதேசமயம் அதிகப்படியான தேங்காயும் சாப்பிடக்கூடாது.
News December 8, 2025
Sports Roundup: F1 உலக சாம்பியன் ஆனார் நோரிஸ்

*அகமதாபாத்தில் நடந்த பெண்களுக்கான டி20 டிராபி காலிறுதியில் கர்நாடகாவிடம் தமிழகம் தோற்றது. *மேஜர் லீக் கால்பந்து 30-வது சீசனில், இண்டர் மயாமி முதல்முறையாக கோப்பையை வென்றது. *F1 கார்பந்தயத்தின் சிறந்த டிரைவருக்கான உலக சாம்பியன் பட்டத்தை இங்கிலாந்தின் லாண்டோ நோரிஸ் கைப்பற்றினார். *கர்நாடகா கிரிக்கெட் சங்க தலைவர் தேர்தலில் EX இந்திய பவுலர் வெங்கடேஷ் பிரசாத் வெற்றி.
News December 8, 2025
சிவன், விநாயகருக்கு உரிய நாள்: இன்று இப்படி வழிபட்டால்..

இன்று சிவனுக்கு உரிய திங்கள்கிழமையும், விநாயகருக்கு உரிய சதுர்த்தியும் ஒரே நாளில் வருவது அபூர்வமான ‘சோம சங்கடஹர சதுர்த்தி’ ஆகும்.. இன்று மாலை 6 மணிக்கு மேல் விநாயகருக்கு அருகம்புல் சாத்தி வழிபடுங்கள். சந்திர தரிசனம் செய்து, ‘ஓம் விக்ன ராஜாய நமஹ’ என்ற ஸ்லோகத்தை 108 முறை உச்சரியுங்கள். வாழ்வில் தீராத சங்கடங்கள், தடைகள் அனைத்தும் நீங்கும். முழு நம்பிக்கையுடன் செய்யுங்கள், நல்லதே நடக்கும்!


