News November 29, 2024
மக்கள் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்: அண்ணாமலை

சட்டம் ஒழுங்கை காக்க முடியாத திமுக அரசால் மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதாக அண்ணாமலை விமர்சித்துள்ளார். பல்லடத்தில் தாய், தந்தை, மகன் கொலையுற்ற செய்தியறிந்து வேதனையடைந்ததாகக் கூறிய அவர், கடந்த ஆண்டும் பல்லடத்தில், இதே போன்று சம்பவம் நடந்ததை நினைவுகூர்ந்துள்ளார். மேலும், காவல்துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதித்து மக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும்படியும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Similar News
News April 26, 2025
பாகிஸ்தானுடன் இனி விளையாடக்கூடாது : கங்குலி

பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாட்டை இந்தியா முற்றிலும் துண்டிக்க வேண்டும் என வலியுறுத்திய சவுரவ் கங்குலி, ஐசிசி மற்றும் ஆசிய போட்டிகளில் கூட பாகிஸ்தானுடன் விளையாடக் கூடாது என கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், பயங்கரவாதத்தை ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது என்றும் கங்குலி தெரிவித்தார். முன்னதாக, எந்தவொரு போட்டியிலும் பாகிஸ்தானுடன் இந்தியா மோதப் போவதில்லை என பிசிசிஐ தெரிவித்திருக்கிறது.
News April 26, 2025
14 தீவிரவாதிகள் : வெளியான அதிர்ச்சி தகவல்

பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட 14 தீவிரவாதிகள் குறித்த தகவலை புலனாய்வு அமைப்புகள் வெளியிட்டுள்ளன. 20-40 வயதுடைய இவர்கள் பாகிஸ்தானின் நிதியுதவியுடன் J&K-ல் தங்கி, தீவிரவாத நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். மேலும், இவர்கள் லஷ்கர்-இ-தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதின் மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது போன்ற தடை செய்யப்பட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் என்றும் புலனாய்வு அமைப்புகள் தெரிவிக்கின்றன.
News April 26, 2025
விஜய் கருத்தரங்கு இடத்தில் தீ விபத்து

கோவையில் தவெக பூத் கமிட்டி கருத்தரங்கு நடைபெறும் இடம் அருகே தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கோவை விமான நிலையத்தில் இருந்து பிரதான சாலை வரை ரோட் ஷோ நடத்திய விஜய்-க்கு கட்சி நிர்வாகிகள் தாரை தப்பட்டை கிழிய வரவேற்பு கொடுத்தனர். பின்னர், அவர் கருத்தரங்கு மேடைக்கு சென்றார். அப்போது, திடீரென்று கருத்தரங்கு நடக்கும் இடம் அருகே திடீரென்று தீவிபத்து ஏற்பட்டதை அடுத்து, உடனே அணைக்கப்பட்டது.