News November 29, 2024
EX மினிஸ்டருக்கு செக் வைத்த ஐகோர்ட்

EX மினிஸ்டர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான வழக்கை ரத்து செய்ய ஐகோர்ட் மறுத்துள்ளது. 2022 நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின்போது, அதிமுகவினர் பரிசுப்பொருள் விநியோகிப்பதாக கிடைத்த தகவலின்பேரில், சோதனை செய்ய வந்த தேர்தல் அதிகாரியை மிரட்டியதாக வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி அவர் தாக்கல் செய்த மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. இது அவருக்கு சிக்கலாக மாறியுள்ளது.
Similar News
News December 8, 2025
மக்கள் பிரச்னைகளுக்கு BJP-யிடம் தீர்வு இல்லை: காங்.,

முக்கிய பிரச்னைகளை திசை திருப்பவே வந்தே மாதரம் பாடல் தொடர்பான <<18503037>>விவாதத்தை மோடி<<>> கையில் எடுத்திருப்பதாக பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நடக்கும் சிறப்பு விவாதத்தில் பங்கேற்ற அவர், மக்கள் நலன் சார்ந்த பிரச்னைகளில் மத்திய அரசிடம் ஒரு தீர்வும் இல்லை என சாடியுள்ளார். மேலும் கடந்த காலத்தை பற்றி மட்டுமே பாஜக பேசி வருவதாகவும் குற்றம்சாட்டினார்.
News December 8, 2025
BREAKING: விடுமுறை… வந்தது மகிழ்ச்சியான அறிவிப்பு

கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையையொட்டி, ஸ்பெஷல் ரயில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, மும்பை – திருவனந்தபுரம் ரயில், டிச.18- ஜன.8 வரை (வியாழன் மட்டும்) இயக்கப்படும். மறுமார்க்கத்தில் டிச.20 – ஜன.10 வரை (சனி மட்டும்) இயக்கப்பட உள்ளது. அதேபோல், மைசூரு – தூத்துக்குடி ரயில் டிச.23, டிச.27 ஆகிய நாள்களில் இயக்கப்படும். மறுமார்க்கத்தில், டிச.24, டிச.28-ல் ஓடும். பிளான் பண்ணிக்கோங்க நண்பர்களே!
News December 8, 2025
குழந்தைகளுக்கு இந்த Snacks கொடுக்காதீங்க!

குழந்தைகளுக்கு சாப்பாடு பிடிக்கிறதோ இல்லையோ, நொறுக்குத் தீனி சாப்பிட ரொம்ப பிடிக்கும். அவர்கள் அடம்பிடித்து கேட்பதால் பெற்றோர்களும் சிப்ஸ், பிஸ்கெட், சாக்லேட், பர்கர் என உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருள்களை வாங்கி கொடுத்துவிடுவர். இதனால் அவர்களுக்கு இளம்வயதிலேயே சுகர், உடற்பருமன் பிரச்னைகள் வருகிறது. எனவே, இதற்கு பதிலாக பழங்கள், நட்ஸ், சோளம் உள்ளிட்ட ஹெல்தியான பொருள்களை கொடுங்கள். SHARE.


