News November 29, 2024

ஆசிரியர்கள் கடுமையாக உழைக்க வேண்டும்: கலெக்டர் அட்வைஸ்

image

கொட்டாரம், அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் அழகு மீனா ஆசிரியர்களிடம் கூறியதாவது, “மாணவர்கள் முன்னேற்றத்துக்காக ஆசிரியர்கள் உறுதுணையாக செயல்படவேண்டும். போதைக்கு அடிமையான மாணவர்களை நல்வழிப்படுத்த வேண்டும். 10, +2 தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் வெற்றிபெற ஆசிரியர்கள் கடுமையாக உழைக்க வேண்டும். கழிப்பிடம், பள்ளி வளாகம் தூய்மையாக இருக்கவேண்டும் என அட்வைஸ் செய்தார்.

Similar News

News August 6, 2025

குமரி அணைகளில் இன்றைய நீர்மட்டம் விவரம்

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாசனத்திற்கு பயன்படும் அணைகளின் இன்றைய (ஆகஸ்ட். 6) நீர்மட்ட விவரம்: பேச்சிப்பாறை அணை 41.30 அடி (மொத்தம் 48 அடி), பெருஞ்சாணி அணை – 67.81 அடி (77 அடி), சிற்றாறு 1 அணை – 10. 66 அடி (18 அடி), சிற்றாறு 2 அணை – 10.76 அடி (18 அடி) நீர் உள்ளது. பேச்சிப்பாறைக்கு 328 கன அடி, பெருஞ்சாணிக்கு 115 கன அடி நீர்வரத்தும் உள்ளது.

News August 6, 2025

குமரி இளைஞர்கள.. வன்கொடுமை தடுப்புக்குழு பதவி அறிவிப்பு!

image

நாகர்கோவில் R.D.O அளவில் ஆதிதிராவிடர் நலக்குழு, வன்கொடுமை தடுப்புக் குழு, மனித கழிவுகளை மனிதர்களே அகற்றுதல் தடுப்பு குழு உறுப்பினர்களின் பதவிகாலம் முடிந்து விட்டது. இதற்கு புதிய உறுப்பினர்கள் பதவிக்கு நாகர்கோவில் வருவாய் கோட்டத்திற்குட்பட்ட தன்னார்வலர்கள், நாகர்கோவில் ஆர்.டி.ஒ அலுவலகத்தில் மனுவை அளிக்கலாம் என குமரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலக செய்திக்குறிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. SHARE

News August 6, 2025

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் 478 மனுக்கள்

image

சுருளகோடு புனித அந்தோணியார் உயர்நிலை பள்ளி வளாகத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது. இந்த முகாமில் பொதுமக்கள் தரப்பில் மொத்தம் 478 மனுக்கள் பல்வேறு துறைகளுக்கு கொடுக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை வட்டார வளர்ச்சி அலுவலர் சசி, வட்டடாட்சியர் சுந்தரவல்லி, முன்னாள் ஊராட்சி தலைவர் விமலாசுரேஷ் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

error: Content is protected !!