News March 22, 2024
கிருஷ்ணகிரி: தண்ணீர் தொட்டியில் விழுந்த குழந்தை பலி

தேன்கனிக்கோட்டை அருகே உள்ள ஏணிபெண்டா பகுதியை சேர்ந்தவர் அருண் (24), மேஸ்திரி. இவருக்கு தர்ஷன் (3) என்ற குழந்தை உள்ளது. சம்பவத்தன்று காலை வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த குழந்தை தர்ஷன் அங்குள்ள தரைமட்ட தண்ணீர் தொட்டிக்குள் எதிர்பாரதவிதமாக தவறிவிழுந்தது. குழந்தையை மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.
Similar News
News February 17, 2026
கிருஷ்ணகிரி: VOTER ID தொலஞ்சிருச்சா..? CLICK NOW

கிருஷ்ணகிரி மக்களே, 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. இந்த சமயத்தில், உங்க VOTER ID தொலைந்து போயிடுச்சா? இல்லை மோசமாகவும், பழசாகவும் இருக்கா? கவலை வேண்டாம்.<
News February 17, 2026
கிருஷ்ணகிரி மலை கிராமங்களுக்கு புதிய தார்சாலை!

பெட்டமுகிலாளம் ஊராட்சிக்கு உட்பட்ட மேலூர்,தொலுவபெட்டா மற்றும் குல்லட்டி ஆகிய மலை கிராமங்களில் வசிக்கும் 653 இருளர் இன மக்களின் நீண்டகால கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. வனப்பகுதி வழியாக சுமார் 9.74 கி.மீ. தொலைவிற்குப் புதிய தார் சாலைகள் அமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்த தமிழக அரசுக்கு இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
News February 17, 2026
சிப்காட்டில் 8,000 பேருக்கு வேலைவாய்ப்பு உறுதி!

சிப்காட்- சூளகிரி தொழிற் பூங்காவில் வான்வெளி மற்றும் பாதுகாப்பு உற்பத்திக்கான தொகுப்பு அமைப்பதற்கும், விமான இயந்திரங்கள், கியர்பாக்ஸ் உபபாகங்கள் உற்பத்தி மேற்கொள்வதற்கும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்த இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.5,980 கோடி முதலீட்டில் 8,400 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


